- டேபிள் டென்னிஸ் சூப்பர் ல
- சென்னை
- இந்துஸ்தான் கிங்பாங்ஸ்
- எஸ்எஸ்விஎம் ஸ்மாஷர்ஸ்
- சூப்பர்கின்ஸ்
- இ-டாடி வாரியர்ஸ்
- லியோ லெஜண்ட்ஸ்
- ஜபியார் ஜகுவார்ஸ்
- தின மலர்
* டேபிள் டென்னிஸ் சூப்பர் லீக் தொடரின் 3வது சீசன் சென்னையில் இன்று தொடங்குகிறது. இந்த தொடரில் இந்துஸ்தான் கிங்பாங்ஸ், எஸ்எஸ்விஎம் ஸ்மாஷர்ஸ், சூப்பர்கின்ஸ், ஈ-டாடி வாரியர்ஸ், லியோ லெஜண்ட்ஸ், ஜேப்பியார் ஜாகுவார்ஸ் என 6 அணிகள் களம் காண உள்ளன.
* டேவிஸ் கோப்பை டென்னிஸ் போட்டியில் விளையாடிய முன்னாள் வீரர் கவுரவ் நடேகரின் ‘நடேகர் ஸ்போர்ட்ஸ் & கேமிங் (என்எஸ்ஜி)’ நிறுவனமும், சோனி தொலைக் காட்சியும் இணைந்து ‘உலக பிக்கிள் பால் லீக் (டபிள்யூபிபிஎல்)’ போட்டியை நடத்த உள்ளதாக அறிவித்துள்ளனர். 6 அணிகள் பங்கேற்க உள்ள இப்போட்டியை இந்த ஆண்டு இறுதியில் அல்லது அடுத்த ஆண்டு தொடக்கத்தில் நடத்த இந்நிறுவனங்கள் திட்டமிட்டுள்ளன. உலக அளவில் 80 நாடுகளிலும், இந்தியாவில் 18 மாநிலங்களில் 8000 பதிவு செய்யப்பட்ட வீரர்கள் உட்பட 30 ஆயிரம் பேர் இந்த விளையாட்டை விளையாடி வருகின்றனர்.
* மலேசியாவின் இபோ மாநகரில் நடைபெறும் 30வது சுல்தான் அஸ்லான் ஷா கோப்பை ஹாக்கி போட்டியின் லீக் சுற்று நேற்றுடன் முடிந்தது. மொத்தம் 6 நாடுகள் பங்கேற்ற இப்போட்டியில் முதல் 2 இடங்களை பிடித்த ஜப்பான், பாகிஸ்தான் அணிகள் பைனலுக்கு முன்னேறின. இறுதிப் போட்டி இன்று நடக்கிறது.
* ‘நடப்பு ஐபிஎல் டி20 தொடரில் பிளே ஆப் சுற்றுக்கு முன்னேற கடும் போட்டி நிலவுவதில் எந்த ஆச்சரியமும் இல்லை. டாப் 6 இடங்களில் உள்ள அணிகளில் எந்த அணி வேண்டுமானாலும் முன்னேறலாம். பெரிய தொடர்களில் இது சகஜம் தான். குறிப்பாக, ஐபிஎல் தொடரில் இது போல ஏற்கனவே நடந்துள்ளது’ என்று இந்திய அணி முன்னாள் கேப்டன் சவுரவ் கங்குலி கூறியுள்ளார்.
* இத்தாலியன் ஓபன் டென்னிஸ் தொடரின் ஆண்கள் ஒற்றையர் பிரிவு முதல் சுற்றில் தகுதிநிலை வீரர் ஸிஸோ பெர்க்ஸ் (பெல்ஜியம்) உடன் மோதிய ஸ்பெயின் நட்சத்திரம் ரபேல் நடால் 4-6, 6-3, 6-4 என்ற செட் கணக்கில் வெற்றியை வசப்படுத்தினார். அடுத்து 2வது சுற்றில் 9வது ரேங்க் வீரர் ஹூபர்ட் ஹர்காக்சின் சவாலை சந்திக்கிறார்.
The post சில்லி பாயின்ட்… appeared first on Dinakaran.