×

ஜாமீன் பெற கால அவகாசம் கேட்டு அமைச்சர் பொன்முடியின் மனைவி மனு: உச்ச நீதிமன்றம் ஏற்பு

புதுடெல்லி: சொத்து குவிப்பு வழக்கில் ஜாமீன் பெற அமைச்சர் பொன்முடியின் மனைவிக்கு இரண்டு வாரம் கூடுதல் அவகாசம் வழங்கி உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்தது தொடர்பான விவகாரத்தில் பொன்முடி அவரது மனைவி விசாலாட்சி ஆகியோர் தொடர்ந்த மேல்முறையீட்டு வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்றம், பொன்முடி குற்றவாளி என்று பிறப்பித்திருந்த உயர் நீதிமன்ற உத்தரவு மற்றும் வழங்கப்பட்ட மூன்று ஆண்டு சிறை தண்டனை ஆகியவற்றை நிறுத்தி வைத்து கடந்த மார்ச் 11ம் தேதி உத்தரவிட்டது. இந்த வழக்கில் பொன்முடியின் மனைவி விசாலாட்சி மட்டும் சம்மந்தப்பட்ட நீதிமன்றத்தை அணுகி ஒரு மாதத்தில் ஜாமீன் பெற்று கொள்ளலாம் என்றும் தெரிவித்திருந்தது.

இதைத்தொடர்ந்து மார்ச் 22ம் தேதி பொன்முடி மீண்டும் அமைச்சராக பதவியேற்றுக் கொண்டார்.இந்த வழக்கு உச்ச நீதிமன்ற நீதிபதிகள் அபாய் எஸ் ஓஹா மற்றும் உஜ்ஜல் புயான் ஆகியோர் அமர்வில் நேற்று விசாரணைக்கு வந்தது.
அப்போது அமைச்சர் பொன்முடியின் மனைவி விசாலாட்சி தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் நீதிபதிகள் முன்னிலையில் ஒரு கோரிக்கை வைத்தார். அதில், ‘‘இந்த வழக்கில் ஜாமீன் பெறுவதற்காக விசாலாட்சி பொன்முடிக்கு வழங்கப்பட்ட அவகாசத்தை மேலும் இரண்டு வாரம் நீட்டிக்க வேண்டும்என்றார் அவரது கோரிக்கையை ஏற்பதாக தெரிவித்த நீதிபதிகள், வழக்கில் ஜாமீன் வாங்க இரண்டு வாரம் கூடுதல் அவகாசம் வழங்கி, புதிய விண்ணப்பம் தொடர்பான வழக்கை முடித்து வைத்து உத்தரவிட்டார்.

The post ஜாமீன் பெற கால அவகாசம் கேட்டு அமைச்சர் பொன்முடியின் மனைவி மனு: உச்ச நீதிமன்றம் ஏற்பு appeared first on Dinakaran.

Tags : Minister ,Ponmudi ,Supreme Court ,New Delhi ,Visalakshi ,Dinakaran ,
× RELATED சொத்துக்குவிப்பு வழக்கில் பொன்முடி ஜாமீன் பெற கூடுதல் அவகாசம்..!!