×

பேராயர் யோஹன் மறைவு: முதல்வர் மு.க.ஸ்டாலின் இரங்கல்

சென்னை: பிலீவர்ஸ் ஈஸ்டர்ன் சர்ச் பேராயர் மோரன் மோர் அத்தனேஷியஸ் யோஹன் மறைவிற்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் டிவிட்டரில் பதிவிட்டிருப்பதாவது: பிலீவர்ஸ் ஈஸ்டர்ன் சர்ச் பேராயர் மோரன் மோர் அத்தனேஷியஸ் யோஹன் மறைவெய்திய செய்தியறிந்து வருந்தினேன். சமயப்பணியுடன் சேர்த்து பல கல்வி, மருத்துவ நிறுவனங்களையும் தொடங்கி ஏழை, எளிய மக்களின் நலனுக்காக உழைத்த அவரது மறைவு கிறித்தவ சமயப் பற்றாளர்களுக்கு மிகப் பெரும் இழப்பாகும். அன்னாரை இழந்து வாடும் அனைவருக்கும் ஆழ்ந்த இரங்கலையும் ஆறுதலையும் தெரிவித்துக் கொள்கிறேன். இவ்வாறு பதிவிட்டுள்ளார்.

The post பேராயர் யோஹன் மறைவு: முதல்வர் மு.க.ஸ்டாலின் இரங்கல் appeared first on Dinakaran.

Tags : Archbishop ,Yohan ,Chief Minister ,M. K. Stalin ,Chennai ,Believers Eastern Church ,Moran More Athanasius Yohan ,Twitter ,M.K.Stal ,
× RELATED பேரறிஞர் அண்ணா, கலைஞர் நினைவிடங்களில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மரியாதை