தேவையான பொருட்கள் :
சிக்கன் – 1 கிலோ.
தக்காளி – 4.
பால் – 250 கிராம்.
மஞ்சள் – 1/4 ஸ்பூன்.
மிளகாய் பொடி – 1/2 ஸ்பூன்.
கொத்தமல்லி விதைகள் – 1 ஸ்பூன்.
இஞ்சி – 100 கிராம்.
உப்பு, எண்ணெய் – தேவையான அளவு.
செய்முறை :
முதலில் எடுத்துக்கொண்ட தக்காளி மற்றும் இஞ்சியை சுத்தம் செய்து சிறிய துண்டுகளாக நறுக்கிக்கொள்ளவும். பின் ஒரு மிக்ஸி ஜாரில் பாலுடன் தக்காளி, இஞ்சியை சேர்த்து பேஸ்ட் போல் நன்றாக அரைத்து தனியே எடுத்து வைக்கவும். இதனிடையே, எடுத்துக்கொண்ட சிக்கன் துண்டுகளை மஞ்சள் மற்றும் கல் உப்பு சேர்த்து நன்கு சுத்தம் செய்து பின் பொடியாக நறுக்கி வைக்கவும். தற்போது, ஜிஞ்சர் சிக்கன் செய்ய பாத்திரம் ஒன்றை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி சூடேற்றவும். எண்ணெய் நன்கு காய்ந்த பின் இதில் சிக்கன் துண்டுகளை சேர்த்து நன்கு வதக்கவும்.
The post ஜிஞ்சர் சிக்கன் appeared first on Dinakaran.