- சிவ
- சேனா
- தேசியவாத காங்கிரஸ்
- ஜனநாயக ஜனதா கட்சி
- பாஜக
- ஹரியானா
- சண்டிகர்
- சிவசேனா
- அரியானா சட்டமன்றம்
- முதல் அமைச்சர்
- நயாப்
- தின மலர்
சண்டிகர்: சிவசேனா, தேசியவாத காங்கிரசை போல் ஜனநாயக ஜனதா கட்சியையும் உடைத்து அதன்மூலம் அரியானாவில் ஆதாயம் தேட பாஜக முயற்சித்து வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. 90 உறுப்பினர்களைக் கொண்ட அரியானா சட்டப்பேரவையில், தற்போது இரண்டு இடங்கள் காலியாக உள்ளன. முதல்வர் நயாப் சிங் சைனி தலைமையிலான பாஜக அரசுக்கு அளித்து வந்த ஆதரவை, கடந்த சில தினங்களுக்கு முன் 3 சுயேச்சைகள் வாபஸ் பெற்றனர்.
இதனால், பாஜக அரசு பெரும்பான்மை இழந்து, ஆட்சி கவிழும் நிலை ஏற்பட்டுள்ளது. அதே சமயம், 30 எம்எல்ஏக்களை கைவசம் வைத்துள்ள காங்கிரஸ் கட்சிக்கு, இந்திய தேசிய லோக்தளம் கட்சியின் ஒரு எம்எல்ஏ, சுயேச்சைகள் 4 பேர் ஆதரவு உள்ளது. மேலும், 10 எம்எல்ஏக்களை வைத்துள்ள துஷ்யந்த் சவுதாலாவின் ஜனநாயக ஜனதா கட்சியும் காங்கிரசிற்கு ஆதரவாக இருப்பதாக கூறப்பட்டது.
ஆனால் ஜனநாயக ஜனதா கட்சியின் 10 எம்எல்ஏக்களில் சிலர், பாஜக முன்னாள் முதல்வர் மனோகர் லால் கட்டாரை சந்தித்து ரகசிய ஆலோசனை நடத்தியதாக கூறப்படுகிறது. மூன்றில் இரண்டு பங்கு எம்எல்ஏக்கள் பாஜகவுக்கு ஆதரவான நிலைபாட்டை எடுத்துள்ளதால், அவர்கள் தாங்கள் தான் உண்மையான ஜனநாயக ஜனதா கட்சி என்று அறிவிக்க திட்டமிட்டு வருவதாக கூறப்படுகிறது. ஜனநாயக ஜனதா கட்சியின் 10 எம்எல்ஏக்களில் முன்னாள் துணை முதல்வர் துஷ்யந்த் சவுதாலா, அவரது தாய் நைனா சவுதாலா, அனூப் தனக், அமர்ஜித் தண்டா ஆகியோர் ஓரணியாக இருக்கின்றனர்.
மீதமுள்ள 4 பேர் பாஜகவுக்கும், 2 பேர் காங்கிரசுக்கும் ஆதரவளிக்க திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது. மகாராஷ்டிராவில் சிவசேனா, தேசியவாத காங்கிரஸ் ஆகிய கட்சிகளின் பெரும்பான்மை எம்எல்ஏக்களை அதிருப்தி எம்எல்ஏக்களாக மாறியதால், அதன்மூலம் பாஜக ஆதாயம் அடைந்து வருகிறது. அதே பார்முலாவை ஜனநாயக ஜனதா கட்சியையும் உடைக்க பாஜக திட்டமிட்டு வருகிறது. தற்போது லோக்சபா தேர்தல் நடைபெறும் நிலையில், அரியானாவின் அரசியல் நெருக்கடி விவகாரம் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது. இந்நிலையில், மாநிலத்தில் குடியரசுத் தலைவர் ஆட்சியை அமல்படுத்தக் கோரியும், பேரவையில் நம்பிக்கை வாக்கெடுப்பை நடத்த வேண்டும் என்றும் எதிர்கட்சிகள் தரப்பில் கோரிக்கைகள் வைக்கப்பட்டு வருகின்றன.
The post சிவசேனா, தேசியவாத காங்கிரசை போல் ஜனநாயக ஜனதா கட்சி உடைகிறது?: அரியானாவில் ஆதாயம் தேட பாஜக முயற்சி appeared first on Dinakaran.