×

சட்ட விரோதமாக பட்டாசு தயாரித்ததே விருதுநகர் பட்டாசு ஆலை விபத்துக்கு காரணம்: எஃப்.ஐ.ஆர்.-ல் தகவல்

விருதுநகர்: சட்ட விரோதமாக பட்டாசு தயாரித்ததே விருதுநகர் பட்டாசு ஆலை விபத்துக்கு காரணம் என்று முதல் தகவல் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அரசு உரிமம் பெற்ற கட்டடத்தில் பட்டாசு தயாரிக்காமல் மரத்தடியில் பட்டாசு தயாரித்துள்ளனர். நிர்ணயிக்கப்பட்டதை விட அதிக ஊழியர்களை வைத்து பட்டாசு தயாரித்துள்ளனர். விபத்து ஏற்பட்ட பட்டாசு ஆலை பாதுகாப்பு உபகரணங்கள் ஏதுமின்றி இயங்கி வந்துள்ளது. முத்துக்கிருஷ்ணன், ஃபோர்மேன் சுரேஷ் என்பவருக்கு பட்டாசு ஆலையை குத்தகைக்கு விட்டுள்ளார். அதிகமானோரைக் கொண்டு பட்டாசு தயாரித்ததால் உராய்வு ஏற்பட்டு வெடிவிபத்து ஏற்பட்டுள்ளது என்று எஃப்.ஐ.ஆர்.ல் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

The post சட்ட விரோதமாக பட்டாசு தயாரித்ததே விருதுநகர் பட்டாசு ஆலை விபத்துக்கு காரணம்: எஃப்.ஐ.ஆர்.-ல் தகவல் appeared first on Dinakaran.

Tags : Virudhunagar firecracker factory ,Virudhunagar ,Dinakaran ,
× RELATED விருதுநகர் பட்டாசு ஆலை விபத்து: உயிரிழப்பு 4ஆக உயர்வு