×

யூடியூபர் சவுக்கு சங்கர் மேலும் ஒரு வழக்கில் கைது..!!

சென்னை: யூடியூபர் சவுக்கு சங்கர் மேலும் ஒரு வழக்கில் கைது செய்யப்பட்டுள்ளார். கிளாம்பாக்கம் பேருந்து நிலையம் குறித்து சி.எம்.டி.ஏ.வின் ஆவணங்களை போலியாக தயாரித்து அவதூறு பரப்பியதாக வழக்கு தொடரப்பட்டது. மோசடி, போலி ஆவணங்கள் மூலம் மக்களிடையே குழப்பத்தை ஏற்படுத்துதல் உள்ளிட்ட 6 பிரிவுகளில் சைபர் கிரைம் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். சென்னை சைபர் கிரைம் போலீசார் ஏற்கனவே 2 வழக்குகள் பதிந்து கைது செய்துள்ள நிலையில், மேலும் ஒரு வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. சவுக்கு சங்கர் ஏற்கனவே 5 வழக்குகளில் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், 6வது வழக்கிலும் கைது செய்யப்பட்டிருக்கிறார்.

The post யூடியூபர் சவுக்கு சங்கர் மேலும் ஒரு வழக்கில் கைது..!! appeared first on Dinakaran.

Tags : Chavik Shankar ,Chennai ,Savuk Shankar ,Clambakkam ,CMDA ,Chavuk Shankar ,
× RELATED சவுக்கு சங்கர் தொடர்பான வழக்கை...