×

திருச்செந்தூரில் காலையில் உள்வாங்கிய கடல் மாலையில் சீறியது

*அச்சமின்றி புனித நீராடிய பக்தர்கள்

திருச்செந்தூர் : திருச்செந்தூர் கோயில் கடற்கரை பகுதியில் நேற்று காலை கடல் உள்வாங்கிய நிலையில், மாலையில் அலையின் வேகம் சீற்றத்துடன் காணப்பட்டது. ஆனாலும் பக்தர்கள், அச்சமின்றி புனித நீராடினர்.முருகப்பெருமானின் அறுபடை வீடுகளில் 2ம் படை வீடான திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயிலுக்கு கோடை விடுமுறை காரணமாக பக்தர்கள் வருகை அதிகரித்து காணப்படுகிறது. குறிப்பாக வார கடைசி நாட்களில் கூட்டம் அலைமோதுகிறது.

கோயில் கடற்கரை பகுதியில் வழக்கமாக அமாவாசை மற்றும் பவுர்ணமி நாட்களில் கடல்நீர் மட்டத்தில் அவ்வப்போது மாற்றம் ஏற்படும். நேற்று முன்தினம் அமாவாசை வந்த நிலையில், திருச்செந்தூர் கோயில் பகுதியில் நேற்று காலையில் கடல் உள்வாங்கி காணப்பட்டது. இதனால் கடலில் பாறைகள் வெளியே தெரிந்தன. பின்னர் கடல் இயல்பு நிலைக்கு மாறியது. இந்நிலையில் நேற்று மாலை வழக்கத்தை விட கடல் அலையின் வேகம் அதிகமாக இருந்தது. ஆனாலும் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அச்சமின்றி கடலில் புனித நீராடி கோயிலில் தரிசனம் செய்தனர்.

The post திருச்செந்தூரில் காலையில் உள்வாங்கிய கடல் மாலையில் சீறியது appeared first on Dinakaran.

Tags : Tiruchendur ,Lord ,Muruga ,
× RELATED திருச்செந்தூர் முருகன் அருளை பெற வழிபடும் முறை..!!