அரியலூர், மே 10: அரியலூர் அடுத்த கீழப்பழுர் கருவிடைச்சேரி சாலை கி.மீ 3/6-இல் பாலப் பணி, நெடுஞ்சாலைத்துறை பணிகள் குறித்து, தஞ்சாவூர் கண்காணிப்பு பொறியாளர் (திட்டங்கள்) செல்வி தலைமையில் நேற்று ஆய்வு மேற்கொண்டனர். நெடுஞ்சாலைத்துறை சார்பில் பணிகளின் தரம் குறித்து, உள் தணிக்கை குழு ஆய்வு நடத்தியது. தமிழ்நாடு நெடுஞ்சாலைத்துறை சார்பில், ஆண்டுதோறும் மே மாதத்தில் பணிகளின் தரம் குறித்து உள்தணிக்கை குழு ஆய்வு மேற்கொள்ளும். அந்த வகையில் அரியலூர் கோட்டக் கட்டுப்பாட்டிலுள்ள அரியலூர் உட்கோட்டத்தின் கீழ் கீழப்பழுர் கருவிடைச்சேரி கி.மீ 3/6ல் பாலப் பணி ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.
கண்காணிப்பு பொறியாளர் (திட்டங்கள்) செல்வி தலைமையில், உதவிக் கோட்டப் பொறியாளர் மீனாட்சி, இளநிலைப் பொறியாளர் சௌந்தராஜன் ஆகியோர் கொண்ட குழுவினர் ஆய்வு செய்தனர். அரியலூர் கோட்டப் பொறியாளர் உத்தண்டி. உதவிக்கோட்டப் பொறியாளர் ராஜா, உதவிப் பொறியாளர் இளையபிரபுராஜன், மற்றும் தரக்கட்டுப்பாட்டு அலகின் உதவிக்கோட்டப் பொறியாளர் செல்வராஜ், உதவிப் பொறியாளர் சமையசக்தி உட்பட பலர் கலந்து கொண்டனர்.
The post கண்காணிப்பு பொறியாளர் சாலையின் தரம் குறித்து ஆய்வு appeared first on Dinakaran.