×

காங்கிரஸ் கமிட்டி சார்பில் முன்னாள் எம்.எல்.ஏ. திருமகன் ஈவெரா நினைவு நீர்மோர் பந்தல் திறப்பு

ஈரோடு,மே10: ஈரோடு மாநகர் மாவட்ட காங்கிரஸ் கமிட்டி சார்பில், மறைந்த ஈரோடு கிழக்கு சட்டமன்ற உறுப்பினர் திருமகன் ஈவெரா நினைவாக நேற்று நீர்மோர் பந்தல் திறக்கப்பட்டது. ஈரோடு பஸ் நிலையத்தில் அமைக்கப்பட்டுள்ள இந்த நீர்மோர் பந்தல் திறப்பு விழாவுக்கு ஈரோடு மாநகர் மாவட்ட காங்கிரஸ் கமிட்டி பொறுப்பாளர் டி.திருச்செல்வம் தலைமை வகித்தார். மாவட்ட துணைத் தலைவர் ராஜேஷ் ராஜப்பா, மாவட்ட துணைச் செயலாளர் மாமரத்துபாளையம் கோபி ஆகியோர் முன்னிலை வகித்தனர். திமுக கோட்டை பகுதி செயலாளர் பொ.ராமச்சந்திரன் சிறப்பு விருந்தினராகப் பங்கேற்று பொதுமக்களுக்கு நீர்மோர் வழங்கி துவக்கி வைத்தார்.

இந்நிகழ்ச்சியில், 35வது வார்டு கவுன்சிலர் புவனேஸ்வரி பாலசுந்தரம்,தமிழ்நாடு காங்கிரஸ் சிறுபான்மை பிரிவு மாநில துணைத் தலைவர் எம்.ஜவஹர்அலி,பொது செயலாளர் வின்சென்ட்,மாநகர் மாவட்ட காங்கிரஸ் நிர்வாகி டிட்டோ, நெசவாளர் அணி மாவட்ட தலைவர் மாரிமுத்து, ஈரோடு மாவட்ட காங்கிரஸ் சிறுபான்மைத்துறை துணைத் தலைவர் கே.என்.பாஷா,ஈரோடு மாநகர் மாவட்ட காங்கிரஸ் சிறுபான்மை துறைத் தலைவர் எம்.ஜூபைர் அகமது,சூரம்பட்டி வார்டு தலைவர் விஜயகுமார் உள்ளிட்ட பலர் பங்கேற்று, பஸ் நிலையத்துக்கு வந்த பயணிகளுக்கு நீர்மோர் வழங்கினர்.

The post காங்கிரஸ் கமிட்டி சார்பில் முன்னாள் எம்.எல்.ஏ. திருமகன் ஈவெரா நினைவு நீர்மோர் பந்தல் திறப்பு appeared first on Dinakaran.

Tags : MLA ,Congress Committee ,Thirumakan ,Evera ,Memorial ,Nemor Pandal ,Erode ,Erode Metropolitan District Congress Committee ,Neemor Pandal ,Erode East Assembly ,Thirumagan Eevera ,Erode Bus Station ,
× RELATED கள்ளக்குறிச்சி விவகாரம் போல்...