×

போலி போலீஸ் கைது

தஞ்சாவூர் மாவட்டம், கும்பகோணம் அடுத்த அன்னஅக்ரஹாரத்தை சேர்ந்தவர் முருகன் (58). தனியார் நிறுவன ஊழியர். இவர் பணிபுரியும் நிறுவனம் சார்பில் வெளியூர்களுக்கு பணம் வசூலிக்க செல்வது வழக்கம். இவர் கடந்த ஏப்.25ம் தேதி திருச்சியில் வசூலை முடித்து கொண்டு மதுரைக்கு வந்துள்ளார். இரவு கோபாலன் கொத்தன் தெருவில் நடந்து சென்று கொண்டிருந்த போது முருகனை வழிமறித்த மர்மநபர், தான் போலீஸ் எனக்கூறி அவர் வைத்திருந்த பையை வாங்கி சோதனையிட்டுள்ளார். பையில் எதுவும் இல்லாததால் முருகனை சோதனை செய்துள்ளார். முருகன் இடுப்பில் இருந்த பணத்தை வாங்கி சோதனை செய்த பின் திருப்பி கொடுத்துள்ளார்.

பின்னர் பணத்தை சரிபார்த்தபோது, தான் வைத்திருந்த பணத்தில் ரூ.1.50 லட்சம் காணாமல் போயிருந்ததை கண்டு அதிர்ச்சியடைந்தார். இதுகுறித்து முருகன் அளித்த புகாரில் திலகர் திடல் போலீசார் விசாரணை நடத்தி வந்தனர். இதில் பணம் பறித்தவர் மதுரை திடீர் நகர் சந்தன மாரியம்மன் கோயில் தெருவைச் சேர்ந்த ஆறுமுகபாண்டி (55) என்பதும், போலீஸ் என போலியாக கூறி கைவரிசை காட்டியதும் தெரிந்தது. இதையடுத்து போலீசார் அவரை கைது செய்தனர்.

The post போலி போலீஸ் கைது appeared first on Dinakaran.

Tags : Murugan ,Anna Agraharam ,Kumbakonam ,Thanjavur district ,Madurai ,Trichy ,Dinakaran ,
× RELATED வைகாசி முதல் முகூர்த்த நாளான இன்று...