×

கண்டமனூர் அருகே சூறாவளி காற்றுடன் திடீர் மழை: வீட்டின் மேற்கூரை பறந்தது

வருசநாடு, மே 10: கண்டமனூர் அருகே நேற்று முன்தினம் இரவு பலத்த சூறாவளி காற்றுடன் கோடை மழை பெய்தது. இதில் வீட்டின் மேற்கூரை பறந்தது. கண்டமனூர் பகுதியில் நேற்று முன்தினம் இரவு திடீரென சூறாவளி காற்றுடன் கனமழை பெய்தது. அப்போது புதுராமச்சந்திராபுரம் கிராமத்தை சேர்ந்த செல்வம் என்பவரின் வீட்டு மேற்கூரையில் அமைக்கப்பட்டிருந்த தகரம் காற்றில் அடித்து செல்லப்பட்டது. இதனால் தகரத்தின் மேல் வைக்கப்பட்டிருந்த கற்கள் வீட்டிற்குள் விழுந்தன. அப்போது உள்ளே தூங்கிக் கொண்டிருந்த செல்வம், அவரது மனைவி சந்தோசம், மகள் சுபிதா மற்றும் பேத்தி ஆர்த்தி ஆகியோர் நூலிழையில் உயிர் தப்பினர்.

இதே போல் சூறாவளி காற்று காரணமாக புதுராமச்சந்திராபுரம், கண்டமனூர் ஆகிய கிராமங்களில் ஏராளமான மரங்கள் சரிந்தன. சில இடங்களில் மரக்கிளைகள் உடைந்து மின் கம்பிகள் மீது விழுந்தது. அவற்றை மின்வாரிய பணியாளர்கள் நேற்று அகற்றி மின் கம்பிகளை சீரமைத்தனர்.

The post கண்டமனூர் அருகே சூறாவளி காற்றுடன் திடீர் மழை: வீட்டின் மேற்கூரை பறந்தது appeared first on Dinakaran.

Tags : Kandamanur ,Varusanadu ,Puduramachandrapuram ,Dinakaran ,
× RELATED சாலையோர முட்புதர்கள் அகற்றம்