×

சாம்பியன்ஸ் லீக் கால்பந்து: பைனலில் டார்ட்மண்ட் ரியல்மாட்ரிட்

மாட்ரிட்: ஐரோப்பிய கால்பந்து கிளப்களுக்கு இடையிலான யுஇஎப்ஏ சாம்பியன்ஸ் லீக் போட்டியின் 2வது அரையிறுதி சுற்று ஆட்டங்கள் நேற்றுடன் முடிந்தன. அரையிறுதி முதல் சுற்றின் 2வது ஆட்டத்தில் டார்ட்மண்ட்(ஜெர்மனி) 1-0 என்ற கோல்கணக்கில் பாரிஸ் செயின்ட் ஜெர்மைன்(பிரான்ஸ்) அணியை வீழ்த்தி இருந்தது. தொடர்ந்து நேற்று முன்தினம் நடந்த 2வது சுற்றின் முதல் ஆட்டத்திலும் டார்ட்மண்ட் 1-0 என்ற கோல் கணக்கில் பாரிஸ் செயின்ட் ஜெர்மைன் அணியை வென்றது. அதனால் 2-0 என்ற கோல் கணக்கில் டார்ட்மண்ட் 3வது முறையாக இறுதி ஆட்டத்துக்கு முன்னேறியது. முன்னதாக நடந்த முதல் சுற்றின் 2வது ஆட்டம் பேயர்ன் மியூனிக்(ஜெர்மனி), ரியல் மாட்ரிட்(ஸ்பெயின்) இடையே 2-2 என்ற கோல் கணக்கில் டிராவில் முடிந்தது.

இந்நிலையில் நேற்று நடந்த 2வது சுற்றின் 2வது ஆட்டத்தில் ரியல் மாட்ரிட்-பேயர்ன் மியூனிக் அணிகள் மோதின. ஸ்பெயினின் மாட்ரிட் நகரில் நடந்த ஆட்டத்தில் ரியல் மாட்ரிட் 2-1 என்ற கோல் கணக்கில் வென்றது. அதனால் 4-3 என்ற மொத்த கோல்கள் அடிப்படையில் வெற்றிப் பெற்ற ரியல் மாட்ரிட் 18வது முறையாக இறுதி ஆட்டத்துக்குள் நுழைந்துள்ளது. ஜூன் 1ம் தேதி நள்ளிரவு லண்டன் வேம்பலி அரங்கில் நடைபெறும் இறுதி ஆட்டத்தில் டார்ட்மண்ட்-ரியல் மாட்ரிட் அணிகள் மோதுன்றன.

The post சாம்பியன்ஸ் லீக் கால்பந்து: பைனலில் டார்ட்மண்ட் ரியல்மாட்ரிட் appeared first on Dinakaran.

Tags : Champions League Soccer ,Dortmund ,Real Madrid ,Madrid ,UEFA Champions League ,Germany ,Paris St. Germain ,France ,Champions League Football ,Dinakaran ,
× RELATED ரியல் மாட்ரிட் அணியில் எம்பாப்பே