- அகிலேஷ்
- பாஜக
- லக்னோ
- சமாஜ்வாடி கட்சி
- அகிலேஷ் யாதவ்
- இங்கிலாந்து
- அஸ்ட்ராஜெனெகா மருந்து நிறுவனம்
- சீரம் நிறுவனம்
லக்னோ: பாஜ தலைமையிலான அரசானது, நாட்டு மக்களின் உயிரை ஆபத்தில் ஆழ்த்தியுள்ளதாக சமாஜ்வாதி கட்சியின் தலைவர் அகிலேஷ் யாதவ் தெரிவித்துள்ளார். இங்கிலாந்தை சேர்ந்த அஸ்ட்ராஜெனகா மருந்து நிறுவனமானது, சீரம் நிறுவனத்துடன் இணைந்து தயாரித்த தனது கொரோனா தடுப்பூசியானது அரிய பக்கவிளைவை ஏற்படுத்தும் என்று ஒப்புக்கொண்டுள்ளது. இந்நிலையில் அதிகப்படியான விநியோகம் காரணமாக உலகளாவிய அளவில் தனது தடுப்பூசியை திரும்ப பெறத்தொடங்கி உள்ளது.
இது குறித்து சமாஜ்வாதி கட்சியின் தலைவர் அகிலேஷ் யாதவ் தனது எக்ஸ் பக்கத்தில்,‘‘கொரோனா தடுப்பூசியை தயாரிக்கும் நிறுவனமானது அதிகப்படியாக சப்ளையை காரணம் காட்டி அந்த கொடிய தடுப்பூசியை திரும்ப பெறுகிறது. ஆத்திரமடைந்த பொதுமக்கள், இந்த ஆபத்தான தடுப்பூசியை போட்டுக்கொண்டவர்கள் உடலில் இருந்து எப்படி திரும்ப வரும் என்று பாஜ அரசிடம் கேள்வி எழுப்புகிறார்கள்? கோடிக்கணக்கான நன்கொடைக்காக பாஜ அரசு கோடிக்கணக்கான உயிர்களை ஆபத்தில் ஆழ்த்தியுள்ளது. பாஜ தனது சொந்தநாட்டு மக்களின் உயிரை பணயம் வைத்து மக்கள் விரோத கட்சியாக மாறியுள்ளது”என்று குறிப்பிட்டுள்ளார்.
The post கோடிக்கணக்கான நன்கொடைக்காக கோடிக்கணக்கான மக்களின் உயிரை ஆபத்தில் தள்ளிய பாஜ: அகிலேஷ் குற்றச்சாட்டு appeared first on Dinakaran.