×

சென்னையில் தொடரும் சம்பவங்கள் நடைபயிற்சி சென்ற தம்பதியை வளர்ப்பு நாய் கடித்து குதறியது: பெண் உரிமையாளரிடம் போலீசார் விசாரணை

சென்னை: சென்னை சூளைமேடு சர்புதீக் தெருவை சேர்ந்தவர் சுரேஷ்(43). இவர் தனியார் நிறுவனத்தில் வேலை செய்து வருகிறார். வழக்கம் போல் நேற்று முன்தினம் காலை தனது மனைவி நீலா (40) உடன் வீட்டின் அருகே நடைபயிற்சியில் ஈடுபட்டிருந்தார். அப்போது அதே பகுதியில் வசிக்கும் மல்லிகா என்பவர் வளர்த்து வரும் நாட்டு நாய் ஒன்று, நடைபயிற்சி சென்ற நீலா மீது திடீரென பாய்ந்து தொடையில் கடித்தது. இதை சற்றும் எதிர்பார்க்காத நீலா அலறியடித்து ஓடினார். அப்போது உடன் வந்த கணவர் சுரேஷ் அந்த நாயை விரட்ட முயன்றார். ஆனால் அது சுரேஷையும் விடாமல் கடித்தது.

கணவன், மனைவி இருவரும் நாயிடம் சிக்கி அலறினர். ஒரு கட்டத்தில் சாலையில் நடந்து சென்ற பொதுமக்கள் கற்களை வீசி நாயை விரட்டி அடித்து தம்பதியை மீட்டனர். பின்னர் காயமடைந்த தம்பதி, கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். இதுகுறித்து சுரேஷ் மற்றும் அவரது மனைவி நீலா ஆகியோர் அளித்த புகாரின்படி சூளைமேடு போலீசார் வழக்கு பதிந்து, நாயின் உரிமையாளரான மல்லிகாவை பிடித்து விசாரணை நடத்தி வருகின்றனர். சென்னையில் கடந்த 2 நாட்களில் ஆயிரம்விளக்கு, ஆலந்தூர், சூளைமேடு என அடுத்ததுத்து 3 இடங்களில் பொதுமக்களை வளப்பு நாய்கள் கடித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

The post சென்னையில் தொடரும் சம்பவங்கள் நடைபயிற்சி சென்ற தம்பதியை வளர்ப்பு நாய் கடித்து குதறியது: பெண் உரிமையாளரிடம் போலீசார் விசாரணை appeared first on Dinakaran.

Tags : CHENNAI ,Suresh ,Chulaimedu Sarbuteek Street, Chennai ,Neela ,
× RELATED ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் சரணடைந்த ஆற்காடு சுரேஷின் தம்பி வாக்குமூலம்..!!