தேவையானவை:
கோவா (ள்ன்ஞ்ஹழ்ப்ங்ள்ள்) – 2 கிண்ணம்
சர்க்கரை – 5 கிண்ணம்
மைதாமாவு – அரை கிண்ணம்
நெய் – 1 1/2 கிண்ணம்
சோடா உப்பு – 1 சிட்டிகை
குங்குமப்பூ – அரை தேக்கரண்டி
பச்சை கற்பூரம் – 1/2 தேக்கரண்டி
தண்ணீர் – 6 கிண்ணம்
செய்முறை:
கோவாவை முதலில் ஒரு தட்டில் கொட்டி பிசையவும். பின்னர் அதில் மைதா மாவையும், சோடா உப்பையும் சேர்த்து நன்றாகப் பிசைந்து மூடி வைக்கவும்.அரை மணிநேரம் கழித்து சிறு சிறு உருண்டை களாக உருட்டவும். ஒரு அகண்ட கனமான பாத்திரத்தில் 6 கிண்ணம் தண்ணீர் விட்டு, கொதிக்க விடவும். பின்னர், அத்துடன் சர்க்கரையை சேர்க்கவும்.பாகு பதம் (இரண்டு விரலால் பாகைத் தொட்டுப் பார்த்தால் பிசுக் என்று ஒட்டிக் கொள்ளும்.) வந்தவுடன் பச்சைக் கற்பூரத்தை சேர்த்து பாகை இறக்கி அதில் குங்குமப்பூவை ஒரு தேக்கரண்டி சூடான பாலில் கரைத்து சேர்க்கவும்.பின்னர், வாணலியில் நெய்யை விட்டு அடுப்பை சிம்மில் வைத்து நெய் காய்ந்த பின் உருட்டி வைத்துள்ள குலாப் ஜாமுன் உருண்டை களை பொன்னிற மாக பொரித்து எடுத்துப் பாகில் போடவும்.
The post மைதா குலாப் ஜாமுன் appeared first on Dinakaran.