×

பெரியகுளத்தில் சவ ஊர்வலத்தில் வெடி போட்ட தகராறில் இளைஞர் கொலை செய்யப்பட்ட சம்பவத்தில் 2 பேர் கைது..!!

தேனி: பெரியகுளத்தில் சவ ஊர்வலத்தில் வெடி போட்ட தகராறில் இளைஞர் கொலை செய்யப்பட்ட சம்பவத்தில் 2 பேர் கைது செய்யப்பட்டனர். கொலை சம்பவம் தொடர்பாக வைத்தியநாதபுரத்தைச் சேர்ந்த கார்த்திக், அஜித்குமார் ஆகியோர் கைது செய்யப்பட்டனர். உயிரிழந்த முன்னாள் ராணுவ வீரர் மனோகரன் சவ ஊர்வலத்தில் வெடி போட்டதில் தகராறு ஏற்பட்டது. வெடி போட்டதால் பொதுமக்களுக்கு இடையூறு என சிலர் தட்டிக் கேட்டபோது தகராறு முற்றியுள்ளது. சவ ஊர்வலத்தின்போது ஏற்பட்ட தகராறில் அருண் என்பவர் வெட்டிக் கொலை செய்யப்பட்டார்.

The post பெரியகுளத்தில் சவ ஊர்வலத்தில் வெடி போட்ட தகராறில் இளைஞர் கொலை செய்யப்பட்ட சம்பவத்தில் 2 பேர் கைது..!! appeared first on Dinakaran.

Tags : Periyakulam funeral procession ,Theni ,Periyakulam ,Karthik ,Ajith Kumar ,Vaidyanathapuram ,Manokaran ,Dinakaran ,
× RELATED சின்னூர் மலைக்கிராமத்திற்கு சாலை அமைக்க நில அளவை பணி தொடங்கியது