×

பிரதமர் மோடி ஆட்சியின் கடைசி 3 ஆண்டுகளில் நாட்டு மக்களின் கடன் சுமை 14 லட்சம் கோடியாக உயர்வு : ஆய்வறிக்கையில் பகீர் தகவல்

டெல்லி : பிரதமர் மோடி ஆட்சியின் கடைசி 3 ஆண்டுகளில் நாட்டு மக்களின் கடன் சுமை 14 லட்சம் கோடியாக உயர்ந்துள்ளதாக ஆய்வில் தெரியவந்துள்ளது. அதே நேரம் மோடி ஆட்சியில் கடைசி 3 ஆண்டுகளில் நாட்டு மக்களின் குடும்ப சேமிப்பு ரூ. 9 லட்சம் கோடி குறைந்துள்ளதாக தேசியக் கணக்குப் புள்ளி விவரம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது. அந்தப் புள்ளவிவரத்தின்படி, கடந்த 2020-21ம் ஆண்டில் நிகர குடும்ப சேமிப்புகள் ரூ.23.29 லட்சம் கோடியாக உச்சம் தொட்டது. ஆனால் கடந்த 2022-23 வரையிலான 3 ஆண்டு காலத்தில், இந்தியாவில் குடும்ப சேமிப்புகள் ரூ.14.16 லட்சம் கோடியாக சரிந்துள்ளது. கடந்த 2021-22-ஆம் ஆண்டு ரூ.17.12 லட்சம் கோடியாக சரிந்த அந்த சேமிப்புகள், 5 ஆண்டுகள் இல்லாத அளவுக்கு 2022-23-ஆம் ஆண்டில் ரூ.14.16 லட்சம் கோடியாக குறைந்தது. இதற்கு முன்பு 2017-18-ஆண்டில் நிகர குடும்ப சேமிப்புகள் ரூ.13.05 லட்சம் கோடியாக மிகவும் சரிந்தது.

இதனிடையே பணவீக்கத்தை கருத்தில் கொண்டால் 2014-க்கு பிறகு தற்போது தான் குடும்ப சேமிப்பு மிக குறைந்துள்ளதாக நிபுணர்கள் தகவல் தெரிவித்துள்ளனர். இந்தியக் குடும்பத்தில் சராசரி சேமிப்பு 5.1% ஆக குறைந்து விட்டதாக 2023, செப்டம்பரில் வெளியான வங்கி அறிக்கை தகவல் அளித்துள்ளது.அதே நேரம், நாட்டின் ஒட்டுமொத்த உற்பத்தி மதிப்பில் 5% சேமிப்பு என்பது 47 ஆண்டில் இல்லாத சரிவாகும். அது மட்டுமல்லாமல், 3 ஆண்டுக்கு முன் ரூ.7 லட்சம் கோடியாக இருந்த நாட்டு மக்களின் மொத்த கடன் 2024-ல்-ரூ.14-லட்சம் கோடியாக உயர்ந்துள்ளது. மோடி அரசின் தவறான பொருளாதாரம், நிர்வாகம், மக்கள் விரோத கொள்கைகளால் சேமிப்பு சரிந்து கடனில் மூழ்குவதாக நிபுணர்கள் கருத்து தெரிவிக்கின்றனர். இந்தியக் குடும்பங்களின் மொத்த கடன் தொகை நாட்டு ஜிடிபியில் 40% அளவுக்கு அதிகரித்து விட்டதாக ஆய்வறிக்கையில் தெரியவந்துள்ளது. இதனை மேற்கோள்காட்டி தவறான பொருளாதாரக் கொள்ளைகளால் மக்கள் வறுமையில் தள்ளி அவர்களது தாலியைப் பறித்தது மோடி ஆட்சி என்று காங்கிரஸ் கண்டனம் தெரிவித்துள்ளது.

The post பிரதமர் மோடி ஆட்சியின் கடைசி 3 ஆண்டுகளில் நாட்டு மக்களின் கடன் சுமை 14 லட்சம் கோடியாக உயர்வு : ஆய்வறிக்கையில் பகீர் தகவல் appeared first on Dinakaran.

Tags : Modi ,Delhi ,
× RELATED குவைத் தீ விபத்தில்...