- கன்னியாகுமரி கடற்கரை
- கன்னியாகுமாரி
- திருச்சி தனியார் மருத்துவக் கல்லூரி
- லெமூர் கடற்கரை
- நாகர்கோவில்
- தின மலர்
கன்னியாகுமரி: கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் அருகே உள்ள லெமூர் பீச்சுக்கு சுற்றுலா வந்த இடத்தில் திருச்சி தனியார் மருத்துவக்கல்லூரியில் மருத்துவம் முடித்து, பயிற்சி டாக்டர்களாக இருந்த 5 பேர் அலையில் சிக்கி இறந்தனர். இந்த சம்பவத்தை தொடர்ந்து லெமூர் பீச் மூடப்பட்டது. அதேபோல் சர்வதேச சுற்றுலா தலமான கன்னியாகுமரியிலும் கடலில் இறங்க யாரும் அனுமதிக்கப்படவில்லை.
சுற்றுலா பயணிகள் கடலில் இறங்குவதை தடுக்க கடலோர பாதுகாப்பு குழும போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டு வருகின்றனர். முக்கடலும் சங்கமிக்கும் திரிவேணி சங்கம பகுதி உள்பட மக்கள் கடலில் இறங்க வாய்ப்புள்ள பகுதிகளில் கயிறுகள் கட்டி எச்சரித்துள்ளனர். இந்தநிலையில் இன்று 4வது நாளாக கடலில் இறங்கி குளிக்க சுற்றுலா பயணிகளுக்கு தடைவிதிக்கப்பட்டு இருந்தது.
The post கன்னியாகுமரி கடற்கரைக்கு செல்ல சுற்றுலா பயணிகளுக்கு 4வது நாளாக தடை appeared first on Dinakaran.