×

மாடு முட்டுவது, நாய் கடிப்பது என்பது நமது உள்ளூர் பிரச்சினை மட்டும் அல்ல: ராதாகிருஷ்ணன் பேட்டி

சென்னை: மாடு முட்டுவது, நாய் கடிப்பது என்பது நமது உள்ளூர் பிரச்சினை மட்டும் அல்ல என்று சென்னை மாநகராட்சி ஆணையர் ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார். மாடு முட்டுவது, நாய் கடிப்பது என்பது தேசிய அளவிலான பிரச்சினை; தேசிய அளவிலான விவாதம் தேவை. குறிப்பிட்ட சில நாய் இனங்களை இறக்குமதி செய்ய, விற்பனை செய்ய, இனப்பெருக்கம் செய்ய டெல்லி ஐகோர்ட் தடை விதித்தது. டெல்லி உயர்நீதிமன்ற தடைக்கு சென்னை உயர்நீதிமன்றம் உள்ளிட்ட உயர்நீதிமன்றங்கள் இடைக்கால தடை விதித்துள்ளன. நாய் உள்ளிட்ட எந்தவொரு விலங்குக்கும் எதிராக நடவடிக்கை எடுக்க எந்த அதிகாரமும் எங்களுக்கு கிடையாது என ராதாகிருஷ்ணன் தெரிவித்தார்.

The post மாடு முட்டுவது, நாய் கடிப்பது என்பது நமது உள்ளூர் பிரச்சினை மட்டும் அல்ல: ராதாகிருஷ்ணன் பேட்டி appeared first on Dinakaran.

Tags : Radhakrishnan ,Chennai ,Municipal Commissioner ,
× RELATED மழை நீர் வடிகால் பணிகள்...