×

நாய்கள் வளர்க்க உரிமம் கட்டாயம்; மக்களிடையே போதிய விழிப்புணர்வு இல்லை: சென்னை மாநகராட்சி ஆணையர் ராதாகிருஷ்ணன் பேட்டி

சென்னை: நாய்கள் வளர்க்க உரிமம் கட்டாயம்; மக்களிடையே போதிய விழிப்புணர்வு இல்லை என்று ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார். செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த சென்னை மாநகராட்சி ஆணையர் ராதாகிருஷ்ணன், நாய்க்கடிக்கு ஆளான குழந்தையை பார்க்கும் போது வேதனையாக உள்ளது. குழந்தையின் உடல்நிலையை கருத்தில் கொண்டு அறுவை சிகிச்சை செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. குழந்தையின் மருத்துவ சிகிச்சைக்கான செலவு குறித்து அரசின் கவனத்திற்கு கொண்டு செல்லப்படும். நாய்க்கடிக்கு ஆளாகுபவர்களின் நிலையை, நாய் வளர்ப்பவர்கள் புரிந்து செயல்பட வேண்டும் என தெரிவித்தார்.

The post நாய்கள் வளர்க்க உரிமம் கட்டாயம்; மக்களிடையே போதிய விழிப்புணர்வு இல்லை: சென்னை மாநகராட்சி ஆணையர் ராதாகிருஷ்ணன் பேட்டி appeared first on Dinakaran.

Tags : Chennai Corporation ,Commissioner ,Radhakrishnan ,CHENNAI ,Dinakaran ,
× RELATED மடிப்பாக்கம் பகுதியில் பாதாள சாக்கடை...