×
Saravana Stores

தேவையின்றி வெளியில் செல்வதை தவிர்க்க வேண்டும்

அரியலூர், மே 9: வெப்பத்தின் தாக்கம் அதிகரிப்பு பொதுமக்கள்பகல் 12 மணி முதல் 3 மணி வரை வெளியில் செல்ல வேண்டாம். அத்தியாவசிய தேவையின்றி ெவளியில் செல்வதை தவிர்க்க வேண்டும் என அரியலூர் கலெக்டர் அறிவுறுத்தி உள்ளார். அரியலூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில், கோடை வெப்பம் மற்றும் வெப்ப அலை பாதிப்புகளிலிருந்து பொதுமக்களை பாதுகாக்கும் வகையில் ஏற்படுத்தப்பட்டுள்ள உடல் வெப்ப பாதிப்பு சிகிச்சை பிரிவினை மாவட்ட கலெக்டர் ஆனி மேரி ஸ்வர்ணா நேற்று நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். தமிழ்நாட்டில் கடந்த சில நாட்களாக பல்வேறு மாவட்டங்களில் வெப்பம் அதிகரித்து காணப்படும் நிலையில், இந்திய வானிலை ஆய்வுமையம் தமிழ்நாட்டின் வட உள் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் வெப்ப அலை வீசக்கூடும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதன் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக அரியலூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில், தரைதளத்தில் கோடை வெப்பம் மற்றும் வெப்ப அலை பாதிப்புகளிலிருந்து பொதுமக்களை பாதுகாக்கும் வகையில் உடல் வெப்ப பாதிப்பு சிகிச்சை பிரிவு 10 படுக்கை வசதிகளுடன், மருத்துவர்கள் சுழற்சி முறையில் பணியாற்றும் வகையில் ஏற்படுத்தப்பட்டுள்ளது. இந்த சிகிச்சை பிரிவானது அனைத்து நாட்களிலும் செயல்படும். கோடை வெப்பம் மற்றும் வெப்ப அலையினால் பாதிக்கப்பட்டு வரும் நோயாளிகளுக்கு உரிய சிகிச்சைகள் அளிக்கும் வசதிகள் மற்றும் மருத்துவர்கள் தயார் நிலையில் உள்ளனர்.

மேலும், இந்த பிரிவு முற்றிலும் குளிரூட்டப்பட்ட வசதிகளுடன் ஏற்படுத்தப்பட்டுள்ளது. எனவே பொதுமக்கள் போதுமான அளவு தண்ணீர் அருந்துமாறும், அத்தியாவசிய தேவையின்றி வெளியில் செல்வதை தவிர்க்குமாறும், குறிப்பாக நண்பகல் 12 மணி முதல் பிற்பகல் 3 மணி வரை வெளியில் செல்வதை தவிர்த்திடுமாறும், வெயிலின் தாக்கத்தால் உடல்நலக்குறைவு ஏற்படும் நிலையில், உடனடியாக மருத்துவரை அணுக வேண்டும். மேலும், கோடை வெப்பம் மற்றும் வெப்ப அலை பாதிப்புகளால் பாதிக்கப்படும் பொதுமக்கள் இந்த மருத்துவ சேவையினை பயன்படுத்திக்கொள்ளுமாறும் மாவட்ட கலெக்டர் ஆனி மேரி ஸ்வர்ணா தெரிவித்துள்ளார்.

The post தேவையின்றி வெளியில் செல்வதை தவிர்க்க வேண்டும் appeared first on Dinakaran.

Tags : Ariyalur ,Yevali ,Ariyalur Government Medical College ,Dinakaran ,
× RELATED அரசு தொழிற்பயிற்சி நிலையங்களில் சேர...