×

வள்ளியூரில் பைக் திருடிய வாலிபர் கைது

நெல்லை, மே 9: வள்ளியூரில் தனியார் நிறுவன ஊழியரின் பைக்கை திருடிய வாலிபரை போலீசார் கைது செய்தனர். வள்ளியூர் அருகேயுள்ள கோட்டை கருங்குளம் வடிவம்மன்பட்டி மேற்கு தெருவை சேர்ந்த ராஜூ (49). இவர் தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வருகிறார். இவர் கடந்த 3ம் தேதி வள்ளியூர் பஸ்நிலையம் அருகேயுள்ள லாட்ஜ் அருகே தனது பைக்கை நிறுத்தினார். இதனையடுத்து 7ம்தேதி தனது பைக்கை எடுக்க அவர் சென்றபோது அதிர்ச்சியடைந்தார். அங்கு நிறுத்தப்பட்டிருந்த அவரது பைக் மாயமாகி இருந்தது. இதுகுறித்து வள்ளியூர் காவல் நிலையத்தில் ராஜூ புகார் அளித்தார். இதன் பேரில் எஸ்ஐ சங்கர் மற்றும் போலீசார் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி அப்பகுதியிலுள்ள சிசிடிவியிலுள்ள காட்சிகளை ஆய்வு நடத்தினர். இதன் அடிப்படையில் பைக்கை திருடிய கருங்குளம் பெருமாள் கோயில் தெருவை சேர்ந்த வெள்ளபாண்டி(36) என்பவரை கைது செய்தனர். அவரிடமிருந்து பைக்கை போலீசார் மீட்டனர்.

The post வள்ளியூரில் பைக் திருடிய வாலிபர் கைது appeared first on Dinakaran.

Tags : Valliyur ,Nellie ,Raju ,Formamanpatti West Street, Fort Karunkulam ,
× RELATED வள்ளியூர் ஒன்றியத்துக்குட்பட்ட...