சங்ககிரி, மே 9: சேலம் மாவட்டம் சங்ககிரி அருகே, ஈரோடு பிரிவு சாலையில் கடந்த 2ம் தேதி மதியம் சுமார் 38 வயது மதிக்கத்தக்க திருநங்கை ஒருவர் வலிப்பு ஏற்பட்டு மயங்கி கிடந்தார். அவரை அருகில் இருந்தவர்கள் மீட்டு சங்ககிரி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு திருநங்கையை பரிசோதித்த டாக்டர் அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக கூறியுள்ளார். இது குறித்து விஏஓ பிரதீப் குமார், சங்ககிரி போலீசில் புகார் அளித்தார். இதன் பேரில், எஸ்ஐ உதயகுமார் வழக்கு பதிவு செய்து விசாரித்ததில், இறந்து போன திருநங்கை சில்க் (38), சேலம் கிழக்கு திருவாக்கவுண்டனூர் காரப்பேட்டையை சேர்ந்தவர் என்பதும், அவரிடம் இருந்த ஆதார் அட்டை மூலம் தெரிய வந்தது. மேலும் போலீசார் சேலம் காரப்பேட்டை பகுதியில் விசாரித்த போது அந்த முகவரியில் திருநங்கைகள் யாரும் இல்லை என தெரிவித்துள்ளனர். எனவே இறந்து போன திருநங்கை யார், எந்த ஊரைச் சேர்ந்தவர் என்று விசாரித்து வருகின்றனர்.
The post திருநங்கை மர்மச்சாவு appeared first on Dinakaran.