- நாமக்கல்
- நாமக்கல் மாவட்ட தொழிலாளர் நலத்துறை
- உதவி ஆணையாளர்
- திருநந்தன்
- தமிழ்நாடு: உச்ச நீதிமன்றம்
- நாமக்கல் மாவட்டம்
- தின மலர்
நாமக்கல், மே 9: நாமக்கல் மாவட்ட தொழிலாளர் நலத்துறை உதவி ஆணையர் திருநந்தன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: தமிழகத்தில் வெப்ப அலை வீசுவதால், தொழில் நிறுவனங்களில் பணியாற்றுவோருக்கு, உரிய பாதுகாப்பு வழங்க வேண்டும். நாமக்கல் மாவட்டத்தில் உள்ள கடைகள், வணிக நிறுவனங்கள், உணவு நிறுவனங்கள், மோட்டாா் போக்குவரத்து நிறுவனங்கள் மற்றும் இதர தொழில் நிறுவனங்களில் வெப்ப அலை பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும். மாவட்டத்தில் உள்ள அனைத்து தொழில் நிறுவனங்களின் உரிமையாளர்களும், தங்களது நிறுவனத்தில் வேலை செய்யும் பணியாளர்கள் மற்றும் அங்கு வரும் மக்களுக்கு, சுகாதாரமான குடிநீர் வசதி, கழிப்பறை, குளியலறை வசதிகள் செய்து கொடுக்க வேண்டும். பணியாளர்கள் தங்குமிடம், இருக்கை வசதி, சுழற்சி முறையில் பணியாளர்களுக்கு ஓய்வு மற்றும் சட்டப்பூர்வ பணி நேரம் ஆகியவை அமல்படுத்த வேண்டும். தொழில், வணிக நிறுவனங்களில் பாதுகாப்பு நடைமுறைகள் பின்பற்றப் படுகிறதா? என்பது குறித்து அதிகாரிகளால் கள ஆய்வு மேற்கொள்ளப்படும். விதிமீறல் இருந்தால் நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
The post தொழில், வணிக நிறுவனங்களில் பாதுகாப்பு நடைமுறைகள் appeared first on Dinakaran.