×
Saravana Stores

தமிழ்நாடு காங். தலைவர் செல்வப்பெருந்தகைக்கு இப்போது தான் காமராஜர் நினைவிடம் ஞாபகம் வந்ததா?.. தமிழிசை கேள்வி

சென்னை: தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகைக்கு, இப்போதுதான் காமராஜர் நினைவிடம் ஞாபகம் வந்ததா? என்று தமிழிசை சவுந்தரராஜன் கேள்வி எழுப்பியுள்ளார். முன்னாள் கவர்னர் தமிழிசை சவுந்தரராஜன் நேற்று வெளியிட்டுள்ள அறிக்கை: கிண்டியில் அமைந்துள்ள காமராஜர் நினைவிடம் கட்டும் பொழுது நான் பள்ளி மாணவியாக இருந்தேன். கோட்டூர்புரம் பகுதியில் பிரசாரம் செய்வதற்காக சென்ற போது பார்த்தேன். மண்டபத்தின் வெளியில் கரும்புச் சாறுகளும் குப்பைகளும் கொட்டப்பட்டு இருந்தன. இப்பொழுதும் அப்படியே காட்சியளிக்கிறது. இங்கிருந்து புல் செடிகள் அனைத்தும் காய்ந்து போய் உள்ளது.

காங்கிரஸ் கட்சியின் தலைவர்கள் முன்னாள் பெருந்தலைவர்களை மதிப்பதே கிடையாது. நான் வெற்றி பெற்றால் இந்த நினைவிடத்தைச் சிறப்பாகப் பராமரிப்பேன். பெருந்தலைவர் காமராஜரின் சரித்திரத்தை யாராலும் மறைக்க முடியாது. காங்கிரஸ் தலைவர்கள் ஒருவருக்கு கூட இங்கு வந்து மரியாதை செலுத்தி விட்டு பிரசாரத்தைத் தொடங்க வேண்டும் என்று தோன்றவில்லை என்று எனது கண்டனத்தை பதிவு செய்தேன். காமராஜர் நினைவிடத்தை பற்றி தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை கேள்வி எழுப்பியுள்ளார். நீங்கள் தமிழக காங்கிரஸ் தலைவராக பதவி ஏற்ற உடனே காமராஜர் நினைவிடத்திற்கு சென்றீர்களா? காமராஜரின் நினைவிட ஞாபகம் இப்போது தான் வந்ததா?

The post தமிழ்நாடு காங். தலைவர் செல்வப்பெருந்தகைக்கு இப்போது தான் காமராஜர் நினைவிடம் ஞாபகம் வந்ததா?.. தமிழிசை கேள்வி appeared first on Dinakaran.

Tags : Tamil Nadu Cong ,Selvaperunthagai ,Kamaraj ,Chennai ,Tamil Nadu Congress ,Selvaperunthakai ,Tamilisai Soundararajan ,Former ,Governor ,Kamaraj Memorial ,Guindy ,President ,Tamilisai ,Dinakaran ,
× RELATED இந்து மதத்தை அரசியல் ஆதாயத்துக்காக...