×
Saravana Stores

தேர்தலில் விதிமீறி அதிக செலவு: மத்திய சென்னை பாஜ வேட்பாளர் மீதான வழக்கு முடித்துவைப்பு

சென்னை: தேர்தல் ஆணைய விதிகளுக்கு முரணாக அதிகளவில் செலவு செய்த மத்திய சென்னை பாஜ வேட்பாளர் வினோஜ் பி.செல்வம் மீது நடவடிக்கை கோரிய வழக்கை உயர் நீதிமன்றம் முடித்து வைத்தது. மக்களவை தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள் அதிகபட்சமாக ₹95 லட்சம் செலவு செய்து கொள்ளலாம் என்று தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. இதை மீறி அதிகமாக செலவு செய்த மத்திய சென்னை பாஜ வேட்பாளர் வினோஜ் பி.செல்வம் மீது நடவடிக்கை எடுக்குமாறு தேர்தல் ஆணையத்துக்கு உத்தரவிடக் கோரி அந்த தொகுதியில் சுயேச்சையாக போட்டியிட்ட அன்பழகன், சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.

இந்த வழக்கு நீதிபதிகள் ஏ.டி.ஜெகதீஷ் சந்திரா மற்றும் கலைமதி ஆகியோர் அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது, தேர்தல் ஆணையம் தரப்பில் வழக்கறிஞர் நிரஞ்சன் ராஜகோபால், தேர்தல் முடிவு வெளியான 30 நாளுக்குள் செலவு கணக்கு விவரங்களை ஆணையத்தில் தாக்கல் செய்ய வேண்டும். தற்போதைய நிலையில், மனுதாரரின் மனு மீது நடவடிக்கை எடுக்க முடியாது. மனுவுக்கு பதிலளிக்கப்படும் என்றார். இதை பதிவு செய்த நீதிபதிகள், வழக்கை முடித்து வைத்தனர்.

The post தேர்தலில் விதிமீறி அதிக செலவு: மத்திய சென்னை பாஜ வேட்பாளர் மீதான வழக்கு முடித்துவைப்பு appeared first on Dinakaran.

Tags : Madhya Pradesh ,BJP ,CHENNAI ,High Court ,Vinoj P. Selvam ,Election Commission ,Lok Sabha ,Dinakaran ,
× RELATED மத்தியப்பிரதேசத்தில் உள்ள பாந்தவ்கர்...