×

தமிழ்நாட்டில் அமுல் பால் விற்பனை செய்யவில்லை: பால்வளத்துறை மறுப்பு


சென்னை: தமிழ்நாட்டில் அமுல் பால் விற்பனை செய்யப்படவில்லை என பால்வளத்துறை தெரிவித்துள்ளது. தமிழக மக்களுக்கு பால் மற்றும் பால் பொருட்கள் விற்பனை செய்யும் பணியில் தமிழ்நாடு கூட்டுறவு பால் உற்பத்தியாளர் இணையம் ஈடுபட்டு வருகிறது. ஆவின் நிறுவனம் வாயிலாக தினமும் 30 லட்சம் லிட்டர் பால் கொள்முதல் செய்யப்படுகிறது. தமிழ்நாட்டில் ஆவின் நிறுவனம் செயல்படுவது போன்று, அமுல் நிறுவனமானது குஜராத் மாநிலத்தை தலைமையகமாக கொண்டு செயல்பட்டு வருகிறது. பால் பாக்கெட்டுகள் மூலம், தமிழ்நாட்டில் அமுல் நிறுவனம் விற்பனையை தொடங்க உள்ளதாக சில மாதங்களுக்கு முன்பு தகவல் வெளியானது. இந்நிலையில், தற்போது மீண்டும். இரண்டு மாதங்களில், தமிழ்நாட்டில் அமுல் நிறுவனமானது பால் பாக்கெட்டுகள் விற்பனையில் களமிறங்க உள்ளதாக தகவல் வெளியானது.

இதையடுத்து, ஆவின் நிறுவனத்துக்கும் அமுல் நிறுவனத்துக்கும் போட்டி ஏற்படும் என்றும், ஆவின் நிறுவனத்தில் பால் கொள்முதல் அளவு குறையும் என்றும் பேச்சுக்கள் எழ ஆரம்பித்தன. அதேபோல் அமுல் நிறுவனத்தின் பால் பொருட்கள் தமிழகம் முழுவதும் விற்பனை செய்யப்பட்டு வருகின்றன. ஆனால் ஒரு மாநில பால் உற்பத்தியாளர் நிறுவனத்திற்கு போட்டியாக மற்றொரு மாநில பால் பாக்கெட்டுகள் விற்பனை செய்யப்படுவது இல்லை. இந்நிலையில், கிருஷ்ணகிரி மாவட்டத்தில் பால் பாக்கெட் ெதாழிற்சாலையை அமுல் நிறுவனம் அமைத்து வருகிறது. இங்கிருந்து பால், தயிர், பன்னீர் உள்ளிட்ட பொருட்களை தமிழகம் முழுவதும் விற்பனை செய்வதற்கான நடவடிக்கைகள் 2023 முதல் தொடங்கியுள்ளது. இதற்கு தமிழக அரசு தரப்பில் கடும் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது.

இதனால் பால் கொள்முதலை அமுல் நிறுவனம் தொடங்கவில்லை. ஆனாலும் கிருஷ்ணகிரியில் பால் பண்ணை கட்டுமானம் மற்றும் உள்கட்டமைப்பு பணிகள் தீவிரமாக நடந்து வருகின்றன. முதற்கட்டமாக ஆவினுக்கு போட்டியாக தயிர், பன்னீர், லஸ்ஸி விற்பனையை அமுல் நிறுவனம் வாயிலாக துவங்கியுள்ளது. இதற்கான கிடங்கு செங்குன்றம் அருகே அமைக்கப்பட்டு உள்ளது. இரண்டு மாதங்களில் சித்தூர் பால் பண்ணையிலிருந்து சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு மாவட்டங்களில் பால் விற்பனையை துவங்குவதற்கு அமுல் முடிவெடுத்துள்ளது என தகவல் வெளியானது. இதற்கு பால்வளத்துறை மறுப்பு தெரிவித்துள்ளது. அமுல் நிறுவனம் பால் விற்பனையை தற்போது வரை தமிழகத்தில் தொடங்கவில்லை என பால்வளத்துறை தெரிவித்துள்ளது.

The post தமிழ்நாட்டில் அமுல் பால் விற்பனை செய்யவில்லை: பால்வளத்துறை மறுப்பு appeared first on Dinakaran.

Tags : Amul ,Tamil Nadu ,CHENNAI ,Tamil Nadu Cooperative Milk Producers Network ,Aavin ,Dinakaran ,
× RELATED அனுமதி கோரி தமிழக அரசுக்கு கோப்புகளை...