×

பிளஸ் 2 பொதுத்தேர்வு எழுதிய மாணவர்களுக்கு ஆலோசனை..!!

சென்னை: எந்த கல்லூரியில் படிக்கலாம், எப்படி விண்ணப்பிக்கலாம், கல்விக்கடன், உதவித்தொகை பெறுவது குறித்து ஆலோசனை வழங்கவுள்ளதாக பள்ளிக்கல்வித் துறை தெரிவித்துள்ளது . அனைத்து விதமான சந்தேகங்கள், வழிகாட்டுதலுக்கு 14417 என்ற இலவச அழைப்பு எண்ணை மாணவர்கள் தொடர்பு கொள்ளலாம். தேர்ச்சி பெறாத மாணவர்களும் துணைத் தேர்வு தொடர்பான வழிகாட்டுதலுக்கு 14417 என்ற இலவச எண்ணுக்கு அழைக்கலாம். மாணவர்கள் காலை 8 மணி முதல் இரவு 8 மணி வரை தொடர்புகொண்டு ஆலோசனைகள் பெறலாம் என பள்ளிக்கல்வித் துறை தெரிவித்துள்ளது.

The post பிளஸ் 2 பொதுத்தேர்வு எழுதிய மாணவர்களுக்கு ஆலோசனை..!! appeared first on Dinakaran.

Tags : Chennai ,
× RELATED பெண் தொகுப்பாளருக்கு பாலியல் தொல்லை...