×

தமிழ்நாட்டில் முதல் முறையாக, சென்னை கிழக்கு கடற்கரைச் சாலையில் மிதவை உணவக கப்பல் பயன்பாட்டுக்கு வர உள்ளது!

சென்னை: தமிழ்நாட்டில் முதல் முறையாக, சென்னை கிழக்கு கடற்கரைச் சாலையில் அமைந்துள்ள முட்டுக்காட்டில் மிதவை உணவக கப்பல் (Floating Restaurant) விரைவில் மக்கள் பயன்பாட்டுக்கு வர உள்ளது. பொதுமக்களுக்கான கட்டணங்கள் நிர்ணயிக்கும் பணிகளும் நடைபெற்று வருவதால் அப்பணி முடிவுற்ற பிறகு மிதவை உணவு கப்பலில் மக்கள் அனுமதிக்கப்படுவார்கள் என்று சுற்றுலாத்துறை தெரிவித்துள்ளது. முட்டுக்காட்டில் நடைபெற்று வரும் மிதவை உணவகத்திற்கான பணிகள் இன்னும் 2 மாதத்திற்குள் நிறைவடையும் என்று தகவல் தெரிவித்துள்ளனர்.

சென்னை ஈசிஆர் சாலையில் அமைந்துள்ள முட்டுக்காட்டில் ரூ.5 கோடி மதிப்பில் மிதவை படகு உணவகம் அமைக்கும் பணியை அமைச்சர் ராமச்சந்திரன் கடந்த ஆண்டு மார்ச் மாதம் 23ம் தேதி தொடங்கி வைத்தார்.

தமிழகத்தின் முதல் மிதவை உணவக கப்பல் (Floating Restaurant) இதுவாகும். இரண்டு அடுக்குகளுடன் இந்த உணவக பயணக் கப்பல் அமைக்கப்படும். நீளம் 125 அடியும், அகலம் 25 அடியும் கொண்டதாக இது உருவாக்கப்பட உள்ளது. உணவகத்தின் தரைத்தளம் முழுவதும் குளிரூட்டப்பட்ட வசதியுடன் அமைக்கப்பட உள்ளது.

முதல் தளம் திறந்தவெளி தளமாகவும், மேல் தளத்தில் அமர்ந்து உணவு உண்டு பயணிக்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. சமயலறை, சேமிப்பு அறை, கழிவறை மற்றும் இயந்திர அறை அமைக்கப்பட உள்ளது. கப்பல் 60 குதிரை சக்தி திறனுடைய இயந்திரம் மூலம் இயக்கப்படும் வகையில் வடிவமைக்கப்பட உள்ளது.

சென்னை கிழக்கு கடற்கரைச் சாலையில் அமைந்துள்ள முட்டுக்காட்டில் தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சி கழகத்தின் மூலம் படகு இல்லம் செயல்பட்டு வருகிறது. இந்தப் படகு இல்லத்தில் பொதுமக்கள் சாகச பயணம் மேற்கொள்ளும் வகையில் மிதவைப் படகுகள், இயந்திரப் படகுகள், வேகமான இயந்திரப் படகுகள் இயக்கப்பட்டு வருகின்றன. இந்த இடத்திற்கு ஏராளமான சுற்றுலாப் பயணிகள் வருகை தர வைக்கும் முயற்சியின் ஒரு பகுதியாக இந்தப் படகு இல்லத்தில் ரூ.5 கோடி மதிப்பீட்டில் 125 அடி நீளம், 25 அடி அகலத்தில் பிரம்மாண்டமான இரண்டு அடுக்கு மிதக்கும் உணவக கப்பல் தொடங்கப்பட உள்ளது.

இந்நிலையில் பொதுமக்களுக்கான கட்டணங்கள் நிர்ணயிக்கும் பணிகள் நடைபெற்று வருவதால் அப்பணி முடிவுற்ற பிறகு மிதவை உணவு கப்பலில் மக்கள் அனுமதிக்கப்படுவார்கள் என்றும் 2 மாதத்திற்குள் நிறைவடையும் என்று தகவல் தெரிவித்துள்ளனர்.

The post தமிழ்நாட்டில் முதல் முறையாக, சென்னை கிழக்கு கடற்கரைச் சாலையில் மிதவை உணவக கப்பல் பயன்பாட்டுக்கு வர உள்ளது! appeared first on Dinakaran.

Tags : Tamil Nadu ,Chennai East Coast Road ,CHENNAI ,Muttukkad ,Chennai's East Coast Road ,East Coast Road ,
× RELATED அனுமதி கோரி தமிழக அரசுக்கு கோப்புகளை...