தேவையானவை:
பனீர் (துருவியது) – ஒரு கப்
அம்சூர் பவுடர் – ஒரு டீஸ்பூன்
பச்சை மிளகாய் – 4 (நறுக்கவும்)
இஞ்சித் துருவல் – ஒரு டீஸ்பூன்
நறுக்கிய கொத்தமல்லி – 4 டேபிள் ஸ்பூன்
கரம் மசாலாத்தூள் – ஒரு டீஸ்பூன்
மிளகாய்த்தூள் – அரை டீஸ்பூன்
கோதுமை மாவு – 2 கப்
ஓமம் – ஒரு டீஸ்பூன்
உப்பு, எண்ணெய் – தேவையான அளவு.
செய்முறை:
கோதுமை மாவுடன் சிறிதளவு உப்பு, ஓமம், ஒரு டீஸ்பூன் எண்ணெய் சேர்த்துப் பிசிறி, தேவையான தண்ணீர் சேர்த்து சப்பாத்தி மாவு போல் பிசைந்து கொள்ளவும். துருவிய பனீர், இஞ்சித் துருவல், அம்சூர் பவுடர், உப்பு, நறுக்கிய பச்சை மிளகாய், மிளகாய்த்தூள், கரம் மசாலாத்தூள், கொத்தமல்லி சேர்த்து நன்கு கலக்கவும். மாவை சிறு உருண்டைகளாக உருட்டி, சப்பாத்தியாக தேய்க்கவும். அதில் லேசாக எண்ணெய் தடவி, பனீர் கலவையை நடுவில் வைத்து மூடி, மீண்டும் தேய்த்து, சூடான தவாவில் போட்டு, இருபுறமும் எண்ணெய் விட்டு சுட்டு எடுத்தால் பனீர் பராத்தா தயார்.
The post பனீர் பராத்தா appeared first on Dinakaran.