×

பாஜக நிர்வாகியை தாக்கிய பாஜக பிரமுகர் மகன் கைது..!!

மதுரை: பாஜக நிர்வாகி நாகார்ஜுன் மீது தாக்குதல் நடத்திய பாஜக பிரமுகர், மகன் உள்ளிட்ட இருவர் கைது செய்யப்பட்டனர். மக்களவை தேர்தலின்போது மற்றொரு பாஜக நிர்வாகி முருகேசனுடன் நாகார்ஜுனுக்கு பிரச்சனை ஏற்பட்டது. மே 4-ல் நாகார்ஜுன் வீட்டுக்கு வந்த முருகேசன் மகன் சுந்தரமகாலிங்கம் உள்ளிட்டோர் கொலை மிரட்டல் விடுத்துள்ளனர். சுப்பிரமணியபுரம் போலீசில் நாகார்ஜுன் தந்த புகாரில் சுந்தரமகாலிங்கம் மற்றும் 17 வயது சிறுவனை போலீசார் கைது செய்தனர்.

The post பாஜக நிர்வாகியை தாக்கிய பாஜக பிரமுகர் மகன் கைது..!! appeared first on Dinakaran.

Tags : BJP ,Madurai ,Nagarjuna ,Murugesan ,Lok Sabha elections ,Nagarjun ,
× RELATED ஓபிஎஸ் குறித்து அண்ணாமலை பேச்சு...