- புதுச்சேரி மாவட்டம்
- புதுக்கோட்டை
- மாட்
- புதுக்கோட்டை-திருச்சி தேசிய நெடுஞ்சாலை...
- புதுகையா மாவட்டம்
- தின மலர்
புதுக்கோட்டை, மே 8: புதுக்கோட்ட மாட்டத்தில் கடும் வறட்சியால் 1,700 ஏக்கர் காடுகளில் தண்ணீர் இன்றி வன விலங்குகள் வெளியேறுகிறது. அங்குள்ள மான், குரங்குகள் கிராமங்களுக்கு வருகின்றன. எனவே வனத்துறையினர் நடவடிக்கை எடுக்க கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. புதுக்கோட்டை-திருச்சி தேசிய நெடுஞ்சாலையின் இடதுபுறத்தில் உள்ளது சுமார் 1,700 ஏக்கர் பரப்பளவு கொண்ட காப்புக்காட்டுடன் கூடிய நார்த்தாமலை. 9 மலைக்குன்றுகளைக் கொண்டது. இந்த நார்த்தாமலைத் தொகுப்பு காடுகள். விஜயாலய சோழன் காலத்தில் பாறைக் குடைவரையில் அமைக்கப்பட்ட அழகிய, அரிய விஜயாலய சோழீஸ்வரம் (சிவன் கோயில்), ராஜராஜ சோழன் காலத்தில் குடைவரையில் அமைக்கப்பட்ட கடம்பர் கோயில் ஆகியன உள்ளன.
சுமார் 1,700 ஏக்கர் பரப்பளவு கொண்டது இம்மலை. சுமார் 4 கிமீ தொலைவு நடந்தால் உச்சியை அடையலாம். பருவகாலங்களில் மழை நாட்களில் நடந்து சென்றால் வழியில் சர்வ சாதாரணமாக நம்மைக் கடந்து செல்லும் அழகிய புள்ளி மான்களைக் காணலாம். பல இடங்களில் நீர் தேங்கி நீர் ஊற்று ஏற்பட்டு இருக்கும். இதனால் பல இடங்களில் சிறிய அளவிலான நீர் வீழ்ச்சி ஓடும். நீண்ட காலமாகவே புதுக்கோட்டை மட்டுமின்றி அருகமை மாவட்டங்களின் எல்லையோர கிராமங்களில் இருந்தும் மீட்கப்படும் மலைப்பாம்புகள் அனைத்தும் இந்தக் காட்டில்தான் விடப்படுகின்றன. இவை தவிர, முயல், காட்டுப்பன்றி, ஆந்தை, எறும்புதின்னி, உடும்பு, நரி போன்றவையும் இங்கே வாழ்கின்றன. புதுக்கோட்டை மாவட்டத்தில் கடந்த ஆண்டுகளாக பருவமழை எப்போதும் பெய்யும் சராசரி மழை அளவைவிட மிகவும் குறைவாக பெய்துள்ளது.
இதனால் புதுக்கோட்டை மாவட்டத்தில் கடும் வறட்சி நிலவுகிறது. மாவட்டத்தில் சில இடங்களில் தண்ணீர் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. தற்போது அனல் காற்று அடித்து வருவதால் கடும் வறட்சி ஏற்பட்டுள்ளது. இதனால் நீர் ஊற்றுகள் வற்றி பாரைகள் காய்ந்து காணப்படுகுறது. இதனால் அங்குள்ள வணவிலங்குகள், பறவைகள் தண்ணீர் இன்றி தவிக்கிறது. நார்த்தாமலை காடுகளில் தண்ணீர் இல்லாமல் வறட்சி நிலவுவதால் அங்குள்ள குரங்கள் தற்போது வெளியேறி கிராமங்களுக்கு படையெடுக்க துவங்கியுள்ளது. இது குறித்து வண விலங்குகள் ஆர்வலர்கள் கூறியதாவது: பச்சைப்பசேலென படர்ந்துக் கிடக்கும் மலை, சுமார் 1,700 ஏக்கர் பரப்பளவு கொண்டது இம்மலை. சுமார் 4 கிமீ தொலைவு நடந்தால் உச்சியை அடையலாம். ஆனால் இங்குள்ள பெருவாரியான மரங்கள் பெரிதும் இலைகள் இன்றி காய்ந்து காணப்படுகிறது.
இருப்பினும் காடுகளில் மலைகளுக்கு இடையே உள்ள பள்ளங்களில் தேங்கி நின்ற தண்ணீரும் கடும் வெயிலுக்கு வரண்டதால் காடுகளில் ஒய்யாரமாக திரிந்த நூற்றுக்கணக்கான குரங்குள் தண்ணீர் தேடி சாரை சாரையாக வெளியேற தொடங்கியுள்ளது. நார்த்தாலையில் இருந்து வெளியேறும் குரங்குங்கள் அருகில் உள்ள பொம்மாடிமலை, சத்தியமங்கலம், விளத்துப்பட்டி, பசுமலைப்பட்டி, அம்மாசத்திரம், குளத்தூர், தாயினிப்படி சித்துப்பட்டி, கருப்பாடிபட்டி ஊரப்பட்டி உள்ளிட்ட பல கிராமங்ளுக்குக்குள் படையெடுத்துள்ளது. மேலும் குடியிருப்புகளில் புகும் குரங்குள் வீட்டில் உள்ள பாத்திரங்களை எடுத்து சென்று வீசி சென்றுவிடுகிறது. இதனால் விவசாயிகள், பொதுமக்கள் அச்சமடைந்து வருகின்றனர். பறவைகள், மான்கள் கிராமங்களுக்குள் வந்துவிட்டது. எனவே வனத்துறை இதற்கு தகுந்த நவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர்.
The post புதுகை மாவட்டத்தில் கடும் வறட்சியால் 1,700 ஏக்கர் காடுகளில் தண்ணீர் இன்றி வெளியேறும் வன விலங்குகள்: மான், குரங்குகள் கிராமங்களுக்கு படையெடுப்பு appeared first on Dinakaran.