- பொடேகாடியம்மன் திருவிழா
- வேலூர்
- பொற்கொடியம்மன் திருவிழா
- வேலங்காடு போர்க்கொடியம்மன்
- புஷ்பரதா
- திருவிழா
- போரகடியம்மன் திருவிழா
வேலூர், மே 8: அணைக்கட்டு அருகே இன்று பொற்கொடியம்மன் திருவிழாவுக்கு 25 சிறப்பு பஸ்கள் இயக்கப்பட உள்ளது. மேலும் பாதுகாப்பு பணியில் 220 போலீசார் ஈடுபடுகின்றனர். வேலூர் மாவட்டம் அணைக்கட்டு அருகே உள்ள வேலங்காடு பொற்கொடியம்மன் கோயில் புஷ்பரத ஏரித்திருவிழா இன்று நடைபெறுகிறது. திருவிழாவிற்கு வேலூர், ராணிப்பேட்டை, திருப்பத்தூர், திருவண்ணாமலை மாவட்டம் மற்றும் ஆந்திரா, கர்நாடாக மாநிலங்களில் இருந்தும் பக்தர்கள் லட்சக்கணக்கில் வருவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதற்கான முன்னேற்பாடுகளை கோயில் நிர்வாகத்தினர் செய்து வருகின்றனர். இந்நிலையில் பொற்கொடியம்மன் புஷ்பரத ஏரித்திருவிழாவிற்கு வரும் பக்தர்களின் வசதிக்காக இன்று அதிகாலை அரசு போக்குவரத்து கழகம் சார்பில் சிறப்பு அரசு பஸ்கள் இயக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
அதன்படி இன்று வேலூரில் இருந்து 15 சிறப்பு பஸ்கள், குடியாத்தத்தில் இருந்து 10 பஸ்கள் என மொத்தம் 25 பஸ்கள் இயக்கப்பட உள்ளது. இதையொட்டி அந்த பகுதியில் தற்காலிக பஸ் நிலையம் அமைக்கப்பட்டுள்ளது. பக்தர்கள் கூட்டம் அதிகமாக காணப்பட்டால் கூடுதலாக பஸ்கள் இயக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று வேலூர் மண்டல போக்குவரத்துக்கழக அதிகாரிகள் தெரிவித்தனர். மேலும் திருவிழாவுக்கு கூட்டம் அதிக அளவில் வரும் என்பதால் அசம்பாவிதம் ஏதும் ஏற்படாமல் இருக்கும் வகையில் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட உள்ளனர். இதையொட்டி ஏடிஎஸ்பி மேற்பார்வையில் டிஎஸ்பி திருநாவுக்கரசு தலைமையில் 6 இன்ஸ்பெக்டர்கள், 100 ஊர்க்காவல் படையினர், 120 போலீசார் என 220 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட உள்ளதாக எஸ்பி மணிவண்ணன் தெரிவித்தார்.
The post பொற்ெகாடியம்மன் திருவிழாவுக்கு 25 சிறப்பு பஸ்கள் இயக்கம் பாதுகாப்பு பணியில் 220 போலீசார் அணைக்கட்டு அருகே இன்று நடைபெறும் appeared first on Dinakaran.