×

வங்கி ஊழியரை மிரட்டி நகை, செல்போன் பறிப்பு அண்ணன், தம்பி உள்பட 3 பேர் கைது

நாசரேத், மே 8: நாசரேத் அருகேயுள்ள பிரகாசபுரத்தைச் சேர்ந்த சுதாகரின் மகன் மனோவா (28). இவர் ஆறுமுகநேரியில் ெசயல்படும் தனியார் வங்கிக் கிளையில் சுய உதவிக்குழு கடன்களை வசூலிக்கும் பணியில் ஈடுபட்டு வருகிறார். நேற்று முன்தினம் குரும்பூர்- நாசரேத் ரோட்டில் உள்ள நெய்விளை அருகே பைக்கில் சென்றுகொண்டிருந்தார். அப்போது இவரை மறித்த 3 பேர் மிரட்டியதோடு அவர் அணிந்திருந்த 5 கிராம் நகை மற்றும் செல்போனை பறித்துச் சென்றனர். அவர் அளித்த புகாரின் பேரில் வழக்குப் பதிவு செய்த நாசரேத் எஸ்ஐ வைகுண்ட தாஸ், இன்ஸ்பெக்டர் ஜீன்குமார் மற்றும் போலீசார் விசாரணை நடத்தினர். இதில் நெய்விளை பகுதியைச் சேர்ந்த மாயாண்டியின் மகன் பால சதீஷ்குமார் (23), கந்தனின் மகன்களான மாயாண்டி (48), மாடசாமி (37) ஆகிய 3பேரும் வழிப்பறியில் ஈடுபட்டது தெரியவந்தது. இதையடுத்து 3 பேரையும் கைதுசெய்த போலீசார், மூவரிடம் இருந்து நகை மற்றும் செல்போனை மீட்டனர்.

The post வங்கி ஊழியரை மிரட்டி நகை, செல்போன் பறிப்பு அண்ணன், தம்பி உள்பட 3 பேர் கைது appeared first on Dinakaran.

Tags : Nazareth ,Manoah ,Sudhakar ,Prakasapuram ,Self Help Group ,Arumuganeri ,Kurumpur-Nazareth ,Dinakaran ,
× RELATED நாசரேத் ரயில்வே கேட் அருகே கோடை...