- பெரம்பூர் ரமணா நகர்
- பெரம்பூர்
- மெட்ரோ ரயில் நிர்வாகம்
- மெட்ரா
- ரமணா நகர், பெரம்பூர்
- மெட்ரோ ரெயில்
- குமரேசன்
- மேலாளர்
பெரம்பூர்: பெரம்பூர் ரமணா நகரில் மெட்ேரா ரயில் பணி மேற்கொள்வது தொடர்பாக பொதுமக்களிடம் கருத்துக்கேட்பு கூட்டம், பெரம்பூரில உள்ள தனியார் திருமண மண்டபத்தில் மெட்ரோ ரயில் நிர்வாகம் சார்பில் நடந்தது. இதில் மெட்ரோ ரயில் உதவி போக்குவரத்து ஒருங்கிணைப்பாளர் குமரேசன், மேலாளர் யோவானந்தம், உதவி மேலாளர் விவேக், செம்பியம் போக்குவரத்து ஆய்வாளர் சுடலைமணி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். அப்போது குடியிருப்போர் நலசங்கம் சார்பில் பாலச்சந்தர், சந்திரன், நடராஜன், தேவேந்திர பாபு உள்ளிட்ட சுமார் 60க்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டனர்.
இதில், மெட்ரோ ரயில் பணிகள் நடந்து வருவதால் ரமணா நகரில் வாகனங்கள் நிறுத்த இடமில்லை. மெட்ரோ ரயில் பணிகள் நடந்து வரும் பகுதிகளில் குடிநீர் மற்றும் கழிவுநீர் குழாய்கள் அடிக்கடி சேதமடைந்து பிரச்னைகள் ஏற்படுகிறது. மெட்ரோ ரயில் பணியால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நிவாரணம், இங்கு அமையும் ரயில் நிலையத்திற்கு ரமணா நகர் என பெயரை வைக்க வேண்டும், தண்ணீர் லாரி அல்லது குப்பை வண்டிகள் செல்வதற்கு பாதை வேறண்டும் என கோரிக்கை விடுத்தனர். இந்த கோரிக்கைகளை உயரதிகாரிகளுடன் ஆலோசனையில் ஈடுபட்டு பரிசீலனை செய்வதாக அதிகாரிகள் உறுதி அளித்து சென்றனர்.
The post பெரம்பூர் ரமணா நகர் பகுதியில் மெட்ரோ ரயில் பணி தொடர்பாக மக்களிடம் கருத்து கேட்பு கூட்டம் appeared first on Dinakaran.