×

சென்னை மெட்ரோ ரயில் சேவை நாளை முதல் வழக்கம் போல் இயக்கப்படும் என்று அறிவிப்பு

சென்னை: சென்னை மெட்ரோ ரயில் சேவை நாளை முதல் வழக்கம் போல் இயக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. காலை 5 மணி முதல் இரவு 11 மணி வரை மெட்ரோ ரயில்கள் வழக்கம்போல் இயக்கப்படும் என மெட்ரோ ரயில் நிர்வாகம் தெரிவித்துள்ளது. “சென்னை சென்ட்ரல் – பரங்கிமலை வரை 6 நிமிட இடைவெளியில் மெட்ரோ ரயில்கள் இயக்கப்படும். விம்கோ நகர் முதல் சென்னை விமான நிலையம் வரை 6 நிமிட இடைவெளியில் மெட்ரோ ரயில்கள் இயக்கப்படும். வண்ணாரப்பேட்டை முதல் ஆலந்தூர் வரை 3 நிமிட இடைவெளியில் மெட்ரோ ரயில்கள் இயக்கப்படும்” என அறிவிக்கப்பட்டுள்ளது.

The post சென்னை மெட்ரோ ரயில் சேவை நாளை முதல் வழக்கம் போல் இயக்கப்படும் என்று அறிவிப்பு appeared first on Dinakaran.

Tags : Chennai Metro ,CHENNAI ,Metro Rail Administration ,Dinakaran ,
× RELATED தொழில்நுட்ப கோளாறு காரணமாக சென்னை...