×

பாலத்தில் இருந்து தவறி விழுந்து தொழிலாளி பலி

கடலூர், மே 8: கடலூர் முதுநகர் அருகே பாலத்தில் இருந்து தவறி விழுந்து வட மாநில தொழிலாளி பரிதாபமாக உயிரிழந்தார். இது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். மேற்கு வங்க மாநிலத்தை சேர்ந்தவர் கபிர் உசேன் மகன் அபுகலாம் (19). இவர் கடலூர் முதுநகர் அருகே உள்ள பூண்டியாங்குப்பத்தில் நெடுஞ்சாலை பாலம் அமைக்கும் பணியில் தொழிலாளியாக வேலை பார்த்து வந்தார். சம்பவத்தன்று பாலத்தில் வேலை செய்து கொண்டிருந்தபோது தவறி கீழே விழுந்துள்ளார். இதில் பலத்த காயமடைந்த அவரை மீட்டு சிகிச்சைக்காக புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இது குறித்த புகாரின் பேரில் கடலூர் முதுநகர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

The post பாலத்தில் இருந்து தவறி விழுந்து தொழிலாளி பலி appeared first on Dinakaran.

Tags : Cuddalore ,Cuddalore Muthunagar ,Kabir Hussain ,Abu Kalam ,West Bengal ,Dinakaran ,
× RELATED தொழிற்சாலையில் ரசாயன கசிவு