×

ஜோதிடர் காரில் கடத்தல்


துரைப்பாக்கம்: திருவான்மியூர், சுப்பிரமணிய தெருவை சேர்ந்தவர் சுந்தரமூர்த்தி (48) அகஸ்தியர் ஜோதிடம் என்ற பெயரில் ஜாதகம் பார்த்து வருகிறார். நேற்று முன்தினம் மாலை, இங்கு வந்த 4 பேர், துரைப்பாக்கம், அண்ணா தெருவில் இருந்து வருவதாகவும், ஜோதிடம் பார்க்க வேண்டுமெனவும் கூறியுள்ளனர். யாருக்கு ஜாதகம் பார்க்க வேண்டும், என கேட்டபோது, வீட்டிற்கே வந்து ஜாதகம் பார்க்க ேவண்டும், என சுந்தரமூர்த்தியை காரில் அழைத்து சென்றுள்ளனர். நீண்ட நேரமாகியும் சுந்தரமூர்த்தி வீடு திரும்பாததால், அவரது குடும்பத்தினர் செல்போனில் தொடர்புகொண்டுள்ளனர். அப்போது, சுவிட்ச் ஆப் என வந்துள்ளது.

இந்நிலையில், சுந்தரமூர்த்தி தனது மனைவி விஜயலட்சுமிக்கு குறுஞ்செய்தி ஒன்று அனுப்பியுள்ளார். அதில், ‘‘மர்ம கும்பல் ஒன்று, என்னை ஆந்திராவிற்கு கடத்தி வந்து, ஒரு அறையில் அடைத்து வைத்துள்ளனர்,’’ என தெரிவித்துள்ளார். இதையடுத்து விஜயலட்சுமி, திருவான்மியூர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். போலீசார் வழக்கு பதிவு ஜோதிடரை கடத்தி சென்ற கும்பல் யார், எதற்காக கடத்தி சென்றனர் என விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

The post ஜோதிடர் காரில் கடத்தல் appeared first on Dinakaran.

Tags : Duraipakkam ,Sundaramurthy ,Subramanya Street, Thiruvanmiyur ,Agasthiyar Jyothidam ,Anna Street, ,Durai Pakkam ,
× RELATED முன்னாள் காதலியிடம் பேசியதால்...