×

ஜிம்பாப்வேக்கு எதிராக வங்கதேசம் ஹாட்ரிக் வெற்றி


சட்டோகிராம்: ஜிம்பாப்வே அணியுடன் நடந்த 3வது டி20 போட்டியில், 9 ரன் வித்தியாசத்தில் ஹாட்ரிக் வெற்றியை வசப்படுத்திய வங்கதேசம் 3-0 என முன்னிலை பெற்றதுடன் தொடரையும் கைப்பற்றியது. அகமது சவுத்ரி ஸ்டேடியத்தில் நேற்று நடந்த இப்போட்டியில், டாஸ் வென்ற ஜிம்பாப்வே முதலில் பந்துவீச… வங்கதேசம் 20 ஓவரில் 5 விக்கெட் இழப்புக்கு 165 ரன் குவித்தது. தவ்ஹித் ஹ்ரிதய் 57, ஜேகர் அலி 44, டன்ஸித் ஹசன் 21 ரன் விளாசினர். ஜிம்பாப்வே தரப்பில் முஸரபானி 3, பராஸ் அக்ரம், சிக்கந்தர் தலா 1 விக்கெட் வீழ்த்தினர்.

அடுத்து களமிறங்கிய ஜிம்பாப்வே 20 ஓவரில் 9 விக்கெட் இழப்புக்கு 156 ரன் எடுத்து, 9 ரன் வித்தியாசத்தில் தோற்றது. மருமானி 31, ஜொனாதன் கேம்பெல் 21, பராஸ் அக்ரம் 34* ரன் எடுத்தனர். வங்கதேச பந்துவீச்சில் சைபுதின் 3, ரிஷத் உசேன் 2, தன்விர், டஸ்கின், டன்ஸிம், மகமதுல்லா தலா 1 விக்கெட் கைப்பற்றினர். தவ்ஹித் ஆட்ட நாயகன் விருது பெற்றார். மொத்தம் 5 போட்டிகள் கொண்ட தொடரில் வங்கதேசம் 3-0 என முன்னிலை வகிக்க, 4வது போட்டி மிர்பூரில் நாளை மறுநாள் நடக்கிறது.

The post ஜிம்பாப்வேக்கு எதிராக வங்கதேசம் ஹாட்ரிக் வெற்றி appeared first on Dinakaran.

Tags : Bangladesh ,Zimbabwe ,T20I ,Ahmed Chaudhary Stadium ,Dinakaran ,
× RELATED வங்கதேச எம்பி கொலை மே. வங்கத்தில் கால்வாயில் இருந்து மனித எலும்பு மீட்பு