×

அழுகிய நிலையில் பெண் சடலம் மீட்பு: கற்பழித்து கொலையா? என விசாரணை

பூந்தமல்லி: திருவேற்காடு அடுத்த வேலப்பன்சாவடி, பூந்தமல்லி நெடுஞ்சாலையோரத்தில் முட்புதரில் அழுகிய நிலையில் பெண் சடலம் கிடப்பதாக திருவேற்காடு போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அதன்பேரில் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றனர். அப்போது, முகம் சிதைக்கப்பட்டு உடல் அழுகிய நிலையிலும், அரைகுறை ஆடைகளுடனும் சுமார் 50 வயது மதிக்கத்தக்க பெண்ணின் சடலம் கிடந்தது. சடலத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக சென்னை கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அப்பெண் இறந்து 3 நாட்களாகி இருக்கலாம் என்றும், உடலில் அரைகுறையாக ஆடைகள் உள்ளதால் கற்பழித்து கொலை செய்யப்பட்டாரா? என்கிற கோணத்தில் விசாரணை நடப்பதாகவும் போலீசார் தெரிவித்துள்ளனர்.

The post அழுகிய நிலையில் பெண் சடலம் மீட்பு: கற்பழித்து கொலையா? என விசாரணை appeared first on Dinakaran.

Tags : Poontamalli ,Thiruvekadu ,Velappansavadi, Poontamalli highway ,
× RELATED பூந்தமல்ல நகராட்சியில் 250 பணியாளர்களுக்கு இலவச மருத்துவ காப்பீடு அட்டை