×

படப்பை அருகே கஞ்சா போதையில் பேக்கரி கடை உரிமையாளரை தாக்கி ரவுடிகள் அட்டகாசம்: ஒருவர் கைது; 2 பேருக்கு வலை

ஸ்ரீபெரும்புதூர்: படப்பை அருகே கஞ்சா போதையில் பேக்கரி கடை உணவ பொருட்கள் வாங்கியதற்கு பணம் கேட்ட உரிமையாளரை தாக்கிய ரவுடியை போலீசார் கைது செய்னர். மேலும், 2 ரவுடிகளை வலைவீசி தேடி வருகின்றனர்.
கேரளாவை சேர்ந்தவர் பிரகாஷ். இவர், தாம்பரம் அருகே படப்பை, ஆரம்பாக்கம் பகுதியில் சொந்தமாக சஹானா டீ ஸ்டால் என்ற பெயரில் டீக்கடை மற்றும் பேக்கரி கடை வைத்து நடத்தி வருகிறார். இவரது, கடைக்கு அதேபகுதியை சேர்ந்த பாலாஜி, சரத், அலெக்ஸ் ஆகிய 3 ரவுடிகளும் சென்று கடந்த சில தினங்களாக பிரகாஷிடம் மாமூல் கேட்டு மிரட்டி வந்துள்ளனர்.

இதுகுறித்து மணிமங்கலம் காவல் நிலையத்தில் பிரகாஷ் பலமுறை புகார் அளித்தும், போலீசார் எந்தவித நடவடிக்கை எடுக்கப்படவில்லை என கூறப்படுகிறது. இந்நிலையில், நேற்று முன்தினம் இரவு 9:30 மணிக்கு கடைக்கு வந்த 3 ரவுடிகளும் குளிர்பானம், குடிநீர், தின்பண்டங்கள் என ஆயிரம் ரூபாய் மதிப்புள்ள பொருட்களை வாங்கியுள்ளனர். இதையடுத்து, அவர்கள் வாங்கிய பொருளுக்கு பிரகாஷ் பணம் கேட்டுள்ளார். அப்போது, சரத் என்கிற ரவுடி பிரகாஷை தாக்கியுள்ளார். இதில், படுகாயமடைந்த பிரகாஷ் சிகிச்சைக்காக குரோம்பேட்டை அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார். தற்போது, இது தொடர்பான சிசிடிவி காட்சிகள் வெளியாகி உள்ளது. இதுகுறித்து பிரகாஷ் அளித்த புகாரின்பேரில், சம்பவத்தில் தொடர்புடைய பாலாஜியை, போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும், தலைமறைவான 2 ரவுடிகளையும் தேடி வருகின்றனர்.

The post படப்பை அருகே கஞ்சா போதையில் பேக்கரி கடை உரிமையாளரை தாக்கி ரவுடிகள் அட்டகாசம்: ஒருவர் கைது; 2 பேருக்கு வலை appeared first on Dinakaran.

Tags : Patapai ,Sriperumbudur ,Patappai ,Prakash ,Kerala ,Tambaram ,
× RELATED மாடுகள் குறுக்கே ஓடியதால் சாலையோர பள்ளத்தில் பாய்ந்த அரசு பேருந்து