×

தேர்தலில் வெற்றி பெற்றால் சினிமாவில் நடிக்க மாட்டேன்: பாஜக வேட்பாளரான நடிகை பேட்டி

மண்டி: தேர்தலில் வெற்றி பெற்றால் சினிமாவில் நடிக்க மாட்டேன்; அதேநேரம் இப்போதைக்கு சினிமாவை விட்டு வெளியே வரமுடியாது என்று மண்டி பாஜக வேட்பாளரான நடிகை கங்கனா கூறினார். இமாச்சல பிரதேச மாநிலம் மண்டி மக்களவைத் தொகுதியில் போட்டியிடும் பாஜக வேட்பாளரும், பாலிவுட் நடிகையுமான கங்கனா ரனாவத் தீவிர தேர்தல் பிரசாரத்திற்கு மத்தியில், தனியார் செய்தி நிறுவனத்திற்கு அளித்த பேட்டியில், ‘சில படங்களில் நடிப்பதற்கு ஒப்பந்தம் செய்து கொண்டதால், இப்போதைக்கு என்னால் இண்டஸ்ட்ரியை விட்டு வெளியேற முடியாது.

லோக்சபா தேர்தலில் வெற்றி பெற்றால், சினிமாவில் நடிக்க மாட்டேன். அரசியலில் மட்டும் கவனம் செலுத்துவேன்’ என்றார். இமாச்சலப் பிரதேசத்தில் ஒரே கட்டமாக 10 மக்களவை தொகுதிகளிலும் வரும் ஜூன் 1ம் தேதி தேர்தல் நடைபெறும். அப்போது சட்டப் பேரவையில் காங்கிரஸ் எம்எல்ஏக்கள் தகுதி நீக்கம் செய்யப்பட்டதைத் தொடர்ந்து காலியான 6 சட்டமன்றத் தொகுதிகளுக்கான தேர்தலும் அதே நாளில் நடைபெறும் என்பது குறிப்பிடத்தக்கது.

The post தேர்தலில் வெற்றி பெற்றால் சினிமாவில் நடிக்க மாட்டேன்: பாஜக வேட்பாளரான நடிகை பேட்டி appeared first on Dinakaran.

Tags : BJP ,Mandi ,Kangana ,Mandi Lok Sabha ,Himachal Pradesh ,Bollywood ,
× RELATED என்னை அறைந்த பெண் காவலரை பாராட்டினால்...