×

நெல்லை காங்கிரஸ் நிர்வாகி ஜெயக்குமார் மரண வழக்கில் புதிய தடயம்

நெல்லை: நெல்லை காங்கிரஸ் நிர்வாகி ஜெயக்குமார் மரண வழக்கில் புதிய தடயம் கிடைத்துள்ளது. எரிந்த நிலையில் சடலமாக மீட்கப்பட்ட ஜெயக்குமாரின் வாயில் இருந்து இரும்பு பிரஷ் கைப்பற்றப்பட்டது. ஜெயக்குமாரின் வாயில் பாத்திரம் விளக்கக் கூடிய பிரஷ் இருந்தது தெரியவந்துள்ளது. இரும்பு பிரஷின் பிளாஸ்டிக் கவர் ஜெயக்குமாரின் வீட்டில் உள்ள மாட்டுக் கொட்டகையில் கிடைத்துள்ளது. கைரேகை நிபுணர்கள் உதவியுடன் காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

The post நெல்லை காங்கிரஸ் நிர்வாகி ஜெயக்குமார் மரண வழக்கில் புதிய தடயம் appeared first on Dinakaran.

Tags : Nellie Congress ,executive ,Jayakumar ,Nellie ,
× RELATED நெல்லை காங்கிரஸ் தலைவர் மர்ம மரணம்: சிபிசிஐடி ஏடிஜிபி நேரடி விசாரணை