×

மன்னார்குடி அருகே தாறுமாறாக ஓடிய வேனால் பரபரப்பு

மன்னார்குடி : மன்னார்குடி அடுத்த எடக்கீழையூர் கிராமத்தை சேர்ந் தவர் சிவசக்தி (39). இவர் தேங்காய் வியாபாரம் செய்து வருகிறார். இவரிடம் அதே கிராமத்தை சேர்ந்த சஞ்சய் காந்தி (40), தருமராஜ் (41) ஆகிய இருவரும் வேலை பார்த்து வருவதாக கூறபடுகிறது.மூவரும் நேற்று முன்தினம் இரவு லோடு வேனில் தேங்காய் ஏற்றிக் கொ ண்டு மன்னார்குடியில் சில இடங் களில் தேங்காய்களை கொடுத்து விட்டு மீதி தேங்காய்களுடன் எடக்கீழையூர் திரும்பினர். சிவசக்தி மினி வேனை ஓட்டினார்.

அப்போது மூவரும் மது குடித்திருந்தாக கூறப்படுகிறது. இதனால் கட்டுப்பாடு இல்லாமல் மினி வேன் சாலையில் பயங்கர வேகத்தில் வந்து ள்ளது. அரசு மாவட்ட தலைமை மருத்துவமனை அருகில் பாமணி கிராமத்தை சேர் ந்த ரவிச்சந்திரன் (54) என்பவர் ஒட்டி சென்ற இரு சக்கர வாகனத்தில் மினி வேன் மோதியது. இதில் ரவிச்சந்திரன் காலில் பலத்த காயம் ஏற்பட்டது.
அங்கிருந்து தப்பிக்க இன்னும் இன்னும் அதிக வேகத்தில் அவர்கள் வண்டி யினை ஓட்டி வரும் பொழுது அந்த வேனினுடைய கூண்டானது கல்கி பார்க் அருகில் உள்ள மரத்தில் மோதி தனியாக கழண்டு சாலையில் பலத்த சத்த த்துடன் விழுந்தது. இது தெரியாமல் மீண்டும் அதிவேகத்தில் சென்ற மினி வேன் ருக்மணி பாளையம் ரோட்டில் உள்ள சென்டர் மீடியன் கட்டையில் ஏறி நின்றது.

இதுகுறித்து தகவல் அறிந்து இன்ஸ்பெக்டர் கரிகாற்சோழன், நகர காவல் நிலைய பயிற்சி எஸ்ஐ ராகா அர்ஜுன், எஸ்எஸ்ஐ வேலாயுதம் உள்ளி ட்ட போலீசார் விபத்து நடத்த இடத்தை பார்வையிட்டு போக்குவரத்தை சரி செய் தனர். மினி வேனில் வந்த சிவசக்தி, சஞ்சய் காந்தி ஆகியோரை காவல் நிலையம் கொண்டு சென்று விசா ரணை நடத்தினர். விபத்தில் காயமடைந்த ரவிச்சந்திரன் மன்னார்குடி அரசு மாவட்ட தலைமை மருத்துவ மனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார்.

The post மன்னார்குடி அருகே தாறுமாறாக ஓடிய வேனால் பரபரப்பு appeared first on Dinakaran.

Tags : Mannargudi ,Sivashakti ,Edakiyoor ,Sanjay Gandhi ,Dharumaraj ,
× RELATED வடுவூர் அருகே தனியார் நிதி நிறுவன பெண்...