×

புதுக்கோட்டை மாவட்டத்தில் குடிநீர் தட்டுப்பாடு இல்லாமல் வழங்க வலியுறுத்தல்

புதுக்கோட்டை, மே 7: புதுக்கோட்டையில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்ட நிர்வாகக் குழுக் கூட்டம் நடைபெற்றது. கூட்டத்துக்கு. மாவட்ட நிர்வாகக் குழு உறுப்பினர் ராஜேந்திரன் தலைமை வகித்தார். கூட்டத்தில், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தேசியச் செயலர் அதுல்குமார் அஞ்சான் உள்ளிட்டோரின் மறைவுக்கு அஞ்சலி செலுத்தப்பட்டது. மாவட்டத்தில் பெரும்பாலான இடங்களில் மின் தட்டுப்பாடு அடிக்கடி ஏற்படுகிறது. மின் தட்டுப்பாட்டால் குடிநீர் விநியோகம் பாதிக்கப்படுகிறது. எனவே, தேவையான அளவு குடிநீர் தட்டுப்பாடு இல்லாமல் கிடைத்திட உரிய பணிகளை போர்க்கால அடிப்படையில் மாவட்ட நிர்வாகம் மேற்கொள்ள வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

பிளஸ்2 பொதுத்தேர்வில் 9 அரசு பள்ளிகள் 100 சதவீதம் தேர்ச்சி
புதுக்கோட்டை,மே7: புதுக்கோட்டை மாவட்டத்திலுள்ள 9 அரசுப்பள்ளிகள் பிளஸ் 2 பொதுத்தேர்வில் 100 சதவீதம் தேர்ச்சி பெற்றுள்ளது. புதுக்கோட்டை மாவட்டம் கீரமங்கலம் அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளி, மாங்காடு அரசு மேல்நிலைப்பள்ளி, நெடுவாசல் அரசு மேல்நிலைப்பள்ளி, கரூர் அரசு மேல்நிலைப்பள்ளி, அரிமளம் அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளி, மண்ணவேலம்பட்டி அரசு மேல்நிலைப்பள்ளி, மருதாந்தலை அரசு மேல்நிலைப்பள்ளி, நார்த்தாமலை அரசு மேல்நிலைப்பள்ளி, சந்தைப்பேட்டை அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளி ஆகிய பள்ளிகள் 100 சதவீத தேர்ச்சி பெற்றது.

The post புதுக்கோட்டை மாவட்டத்தில் குடிநீர் தட்டுப்பாடு இல்லாமல் வழங்க வலியுறுத்தல் appeared first on Dinakaran.

Tags : Pudukkottai district ,Pudukkottai ,District Executive Committee ,Communist Party of India ,Pudukkota ,Rajendran ,National Secretary of the ,Atulkumar Anjan ,Dinakaran ,
× RELATED புதுக்கோட்டை அருகே தனியார் பள்ளி...