×

லால்குடியில் அஸ்வின்ஸ் புதிய கிளை திறப்பு

திருச்சி, மே7: திருச்சி மாவட்டம் லால்குடியில் அஸ்வின்ஸ்-ன் புதிய கிளை நேற்று காலை கோலாகலமாக திறக்கப்பட்டது. பெரம்பலூரை தலைமையிடமாகக் கொண்டு செயல்படும் அஸ்வின்ஸ் குழுமம் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலும், புதுச்சேரியிலும் செயல்பட்டு வருகிறது. ஆரோக்கியமான இனிப்புமற்றும் காரவகைகளை வழங்கி வாடிக்கையாளர்களின் ஏகோபித்த ஆதரவை பெற்றுத்திகழும் அஸ்வின்ஸ் குழுமத்தின் புதிய கிளை திருச்சி மாவட்டம் லால்குடியில் நேற்று காலை திறக்கப்பட்டது.விழாவிற்கு திருச்சி மாருதி மருத்துவமனை நிர்வாக இயக்குனர் மருத்துவர் கே.ஆனந்த், மருத்துவர் ஹேமா ஆகியோர் தலைமை வகித்தனர். அஸ்வின்ஸ் குழுமத்தலைவர் டாக்டர் கே.ஆர்.வி.கணேசன், அஸ்வின்கணேசன், சிபிமோகன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

இதில்ஆ லத்தூர் ஒன்றிய சேர்மன் கிருஷ்ணமூர்த்தி,திமுக திருச்சி கிழக்கு மாவட்ட செயலாளர் வைரமணி, லால்குடி நகராட்சி சேர்மன் மாணிக்கம் ஆகியோர் சிறப்பு அழைப்பாளர்களாக கலந்து கொண்டு புதியகிளையை திறந்துவைத்து குத்துவிளக்கேற்றி வாழ்த்து தெரிவித்தனர்திறப்பு விழாவில் பங்கேற்ற முக்கிய பிரமுகர்களுக்கு அஸ்வின்ஸ் குழுமத்தலைவர் டாக்டர் கே.ஆர்.வி.கணேசன் பொன்னாடை போர்த்தி வரவேற்றார். திறப்பு விழாக்கால சலுகையாக ஒரு கிலோ ஸ்வீட் வாங்கினால் அரை கிலோ காரம் இலவசம்.அரை கிலோ ஸ்வீட் வாங்கினால் கால் கிலோ காரம் இலவசம்.வாங்கும் அனைத்து விதமான கேக்குகளுக்கும் 15% தள்ளுபடி போன்றவை அறிவிக்கப்பட்டிருந்தது.வாடிக்கையாளர்கள் ஆர்வமுடன் திறப்பு விழாவில் பங்கேற்று இனிப்பு மற்றும் காரவகைகளை வாங்கிசென்றனர்

The post லால்குடியில் அஸ்வின்ஸ் புதிய கிளை திறப்பு appeared first on Dinakaran.

Tags : Asvins ,Lalgudi ,Trichchi ,Aswins ,Lalgudi, Trichchi district ,Perampalur ,Aswins Group ,Tamil Nadu ,Puducherry ,Dinakaran ,