×

கமுதியில் திமுக அலுவலகம் திறப்பு

 

கமுதி, மே 7: கமுதியில் திமுக வடக்கு ஒன்றிய புதிய அலுவலகம் திறப்பு விழா நேற்று நடைபெற்றது. விழாவிற்கு திமுக மாவட்ட செயலாளர் காதர்பாட்சா முத்துராமலிங்கம் எம்எல்ஏ தலைமை தாங்கி, அலுவலகத்தை திறந்து வைத்தார் . வடக்கு ஒன்றிய செயலாளர் வாசுதேவன் முன்னிலை வகித்து அனைவரையும் வரவேற்று பேசினார். விழாவில் கேக் வெட்டப்பட்டு அனைவருக்கும் இனிப்பு வழங்கப்பட்டது.

விழாவில், கமுதி நகர செயலாளர் பாலமுருகன், தெற்கு ஒன்றிய செயலாளர் மனோகரன், மத்திய ஒன்றிய செயலாளர் சண்முகநாதன் ஊராட்சி ஒன்றிய குழு துணை தலைவர் அய்யனார், அபிராமம் நகர செயலாளர் ஜாகிர் உசேன் மற்றும் திமுக நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர். மேலும் அலுவலகம் முன்பு கோடை வெயிலில் பொது மக்களின் தாகம் தீர்க்கும் வகையில், நீர் மோர் மற்றும் குடி தண்ணீர் வைக்கப்பட்டது.

The post கமுதியில் திமுக அலுவலகம் திறப்பு appeared first on Dinakaran.

Tags : DMK ,Kamudi ,DMK North Union ,DMK District ,Katharpatsa Muthuramalingam ,MLA ,Northern Union ,Dinakaran ,
× RELATED கமுதி அருகே அரசுப்பள்ளி ஆசிரியர்...