×

ங்கச்சிமடத்தில் கஞ்சா விற்பனையை தடுக்க கோரிக்கை

ராமேஸ்வரம், மே 7: ராமேஸ்வரம் அடுத்துள்ள தங்கச்சிமடம் பகுதியில் அதிக மீனவர்கள் மற்றும் தினக்கூலி ஆட்கள் என கடும் வேலை செய்யக்கூடிய ஏராளமான தொழிலாளிகள் உள்ளனர். இங்கு மதுபான கடைகள் இல்லாததால் மதுவை விட குறைந்த விலையில் இவர்களுக்கு கஞ்சா விற்பனை செய்யப்படுவதாக கூறப்படுகிறது.

குறிப்பாக சூசையப்பர்பட்டினம் கடற்கரை, காட்டு வேளாங்கண்ணி கோயில் பகுதி மற்றும் ராஜீவ்காந்தி நகர் பின்புறம் ஆகிய பகுதிகளில் சில்லரை வியாபாரிகள் ரகசிய இடம் அமைத்து கஞ்சா விற்பனையில் ஈடுபட்டு வருகின்றனர். மதுவைவிட அதிக போதை தரும் கஞ்சா குறைந்து விலைக்கு கிடைப்பதால், இளைஞர்களும் இதில் சிக்கியுள்ளனர். இதனால் கூலித் தொழிலாளிகள் இளைஞர்கள் வேலைக்குச் செல்லாமல் காலை பொழுதில் கஞ்சா போதைக்கு அடிமையாகி விடுகின்றனர் என அப்பகுதி மக்கள் வேதனை தெரிவிக்கின்றனர்.

மேலும் தங்கச்சிமடத்தில் நகர் மற்றும் குடியிருப்பு பகுதிகள் என 20க்கும் மேற்பட்ட இடங்களில் போலீசாரின் ஒத்துழைப்போடு கள்ள சந்தை மது விற்பனை தடையின்றி எந்த நேரமும் நடந்து வருகிறது. இந்த சூழலில் அதற்கு இணையாக சமூக விரோதிகள் கஞ்சா விற்பனையில் ஈடுபட்டு வருவதை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் தனிப்படை அமைத்து கஞ்சா மற்றும் மது விற்பனையை முற்றிலும் தடுக்க வேண்டுமென என சமூக ஆர்வலர்களும் பொதுமக்களும் கோரிக்கை வைத்துள்ளனர்.

The post ங்கச்சிமடத்தில் கஞ்சா விற்பனையை தடுக்க கோரிக்கை appeared first on Dinakaran.

Tags : Ngachimatam ,Rameswaram ,Thangachimadam ,Ngachimata ,
× RELATED மின் தடையை சீரமைக்க கோரிக்கை