×

கொளப்பள்ளி கிளை நூலகத்தில் வாசகர் வட்ட கூட்டம்

 

பந்தலூர், மே 7: பந்தலூர் அருகே கொளப்பள்ளி கிளை நூலகத்தில் வாசகர் வட்ட கூட்டம் நடைபெற்றது. நீலகிரி மாவட்டம், பந்தலூர் அருகே கொளப்பள்ளி கிளை நூலகத்தில் வாசகர் வட்ட கூட்டம் வாசகர் வட்ட தலைவர் முத்துக்குமார் தலைமையில் நடைபெற்றது. நூலகர் முத்துசாமி முன்னிலை வகித்தார்.

கூட்டத்தில் பந்தலூர் நூலகத்தின் முழு நேர நூலகர்கள் அறிவழகன் மற்றும் நித்திய கல்யாணி, எருமாடு கிளை நூலகர் கலைச்செல்வன், சேரம்பாடி கிளை நூலகர் மதியழகன் மற்றும் வாசகர் வட்ட உறுப்பினர்கள் கலந்து கொண்டனர். கூட்டத்தில் மின் இணைப்பு பெறுவதற்கு சம்மதம் தெரிவித்த நில உரிமையாளர் முருகனை கௌரவித்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. மேலும் நூலகத்தின் வாசகர் வட்ட வளர்ச்சி குறித்தும் பேசினர். நிறைவாக நூலக பணியாளர் மூர்த்தி நன்றி கூறினார்.

The post கொளப்பள்ளி கிளை நூலகத்தில் வாசகர் வட்ட கூட்டம் appeared first on Dinakaran.

Tags : Readers Circle Meeting ,Kolapally Branch Library ,Bandalur ,Kolappally ,branch library ,Readers' Circle ,President ,Muthukumar ,Kolapally branch ,Bandalur, ,Nilgiris district ,Dinakaran ,
× RELATED வாசகர் வட்ட கூட்டம்